உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

139

திரு. சாதிக் பாட்சா அவர்கள் பதில் சொன்னார்கள். வீராணம் திட்டத்தைப் பொறுத்தவரையில், சாட்டப்பட்ட குற்றச்சாட்டு களுக்கு நாங்கள் தருகின்ற பதில் இந்த மாமன்றத்திற்குப் பயன் உள்ளவையாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மூன்று நிறுவனங்கள் சுழற்சி முறையில் செய்யப்பட்ட பிரிஸ்டெரஸ்ட் கான்கிரீட் குழாய்களையே தாங்கள் பயன்படுத்து வதாக டெண்டரில் குறிப்பிட்டிருந்தன. இந்த முறையில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் குழாய்கள்தான் உறுதியானவை என்பதும், நீடித்து உழைக்கக்கூடியவை என்பதும், நீர் அழுத்தத்தால் விரைவில் கெட்டுப்போகாதவை என்பதும் உலகறிந்த உண்மைகள். உலகெங்கும் இம்மாதிரியான நீர் கொண்டுவரும் திட்டத்திற்கு சுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் குழாய்களைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அடுத்தபடியாக, கிடைக்கப்பட்ட டெண்டர்களில் மூன்று நிறுவனங்கள் கிடைநூற்றல் முறையையும், மற்ற இரண்டு நிறுவனங்கள் செங்குத்தாக வார்க்கும் முறையையும் பின்பற்றி குழாய்கள் தயாரிக்கின்றன. சூன்யமுறை கான்கிரீட்டை தண்ணீரை உறிஞ்சுவதற்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள். இரண்டு பக்கமும் தகடு இருக்கும், உள்ளே சூன்யமாக இருக்கும். அப்படி பல பேர் எழுதியிருக்கிறார்கள். தண்ணீரை சிமெண்ட் பைப்பிலிருந்து உறிஞ்சி விடுவதற்கு, காய வைப்பதற்குப் பதிலாக இது இருக்கும். இந்த வெற்றிடமுறை தண்ணீரை உறிஞ்சுவதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இது சூன்ய முறையாக இருப்பதால்தான் இதற்கு 'வேக்குவம்' என்று பெயரிட்டார்களேயொழிய, வேறு விதத்தில் இந்தக் குழாய்கள் தயாரிப்பதில் எந்த வித்தியாசமும் கிடையாது. அப்படி தண்ணீரை உறிஞ்சுவதினால் சீக்கிரமாக குழாய்களை அவற்றின் வார்ப்படங்களிலிருந்து எடுத்துவிடலாம் என்றும், அப்படித் தயார்செய்யப்பட்ட குழாய்கள் 11 சதவிகிதத்திலிருந்து 48 சதவிகிதம் கூடுதலாக உறுதிய யானவை என்றும் செய்முறையினால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகையினால் சுழற்சி முறையில் தயார் செய்யப்பட்ட குழாய்கள்தான் உறுதியானவை, நீடித்து உழைக்கக்கூடியவை, உலகெங்கும் இம்மாதிரியான குழாய்களைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது உண்மைக்குப் புறம்பானது.