உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

உரை : 65

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

நம்பிக்கைத் தீர்மானம்

நாள் : 07.12.1972

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, “திரு.மு.கருணாநிதி அவர்களை முதலமைச்சராகக் கொண்ட அமைச்சரவைமீது இப்பேரவை தனது நம்பிக்கையைத் தெரிவிக்கிறது" என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இந்த மாமன்றத்தில் என் மீதும் என் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவை மீதும் நம்பிக்கை கோருகிற தீர்மானத்தை முன்மொழிந்து நான் சில வார்த்தைகள் மாத்திரம் கூற விரும்புகிறேன் ஏனென்றால், எதிர் தரப்பிலிருக்கிற உறுப்பினர்களுக்கு நிறைய வாய்ப்பளிக்க வேண்டுமென்கிற எண்ணத்தோடு அவர்கள் தங்கள் கருத்துக்களை எல்லாம் எடுத்துக் கூறிய பிறகு நான் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்ற வகையில் நான் இத்தீர்மானத்தை முன்மொழிந்து பேசுவதற்கு சிறிது நேரமே எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த மன்றத்தில் இதுவரையில் விவாதிக்கப்பட்ட பல்வேறு விஷயங்களில், 1952-ம் ஆண்டு நம்பிக்கை கோருகிற தீர்மானம் ஒன்றினை அன்றைக்கு இந்த மன்றத்தில் முதல்வராக வீற்றிருந்த ராஜாஜி அவர்கள் கொண்டுவந்து அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையெல்லாம் எடுத்துச்சொன்னார்கள். 1952-ம் ஆண்டு ராஜாஜி அவர்கள் மீதும் அவர்களுடைய தலைமையில் இயங்கிய அமைச்சரவை மீதும் நம்பிக்கை கோருகிற தீர்மானத்தைக் கொண்டுவந்ததற்கான காரணங்கள் அனைவரும் அறிந்ததேயாகும். அருப்புக்கோட்டை ராஜாஜி அவர்கள்

அப்போது நடைபெற்று முடிந்த டைத்தேர்தலில் முதல்வராக இருந்த ஒரு அறிவிப்பு விடுத்தார்கள். அருப்புக்கோட்டை இடைத் தேர்தல் நான் வேண்டுமா