உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

வி

177

படும். ஏதாவது இப்படிப்பட்ட விஷயங்களைக் கேட்க வேண்டுமென்று தான் தோன்றுகிறது. அந்த ஒட்டுக் குடிசைகளில் வாழ்கின்ற மக்கள் அத்தனைபேரையும் நான் இந்திரா காந்தியாகப் பார்க்கிறேன். அந்த ஒட்டுக் குடிசைகளில் வாழ்கின்ற தாய்மார்களை எல்லாம் நான் என்னுடைய தாயாகக் காண்கிறேன். அந்தக் குடிசைகளில் வாழ்கின்றவர்களை எல்லாம் என்னுடைய சகோதரர்களாகக் காண்கிறேன். ஏழை எளிய மக்களின் ஆட்சியிலே, சாதாரணமானவர்களின் ஆட்சியிலே ஏழை எளிய மக்களுக்கு இதையாவது செய்ய முடிந்ததே என்ற நிம்மதியைக் காண்கிறேன். ஆனால் திரு.பொன்னப்ப நாடார் அவர்களுக்குக் குடிசை மாற்று வாரியத் திறப்பு விழாவுக்கு யார் வந்தார்கள் யார் வரவில்லை என்பதுதான் குறை, நான் அரங்கண்ணல் அவர்கள் சார்பிலே தெரிவித்துக் கொள்கிறேன், திரு.பொன்னப்ப நாடார் அவர்கள் அடுத்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு அந்த மக்களைப் பார்க்க வேண்டும். டாக்டர் அவர்களுடைய தொகுதியிலே வேலை நடந்து கொண்டிருக்கிறது, அவரும் அந்த விழாவிலே கலந்து கொள்ள வேண்டும். டாக்டர் ஹாண்டே அவர்கள் வெளியிலே வேகமாகப் பேசக்கூடியவர்கள். அவர் உட்கார்ந்திருக்கின்றபொழுது ஹாண்டே, எழுந்தால்தான் சண்டை.

அதைப்போலவே கிராமப்புறங்களிலே இருக்கின்ற மக்கள் இதற்கு முன்பெல்லாம் அதிகாரிகளை மக்கள் வந்து சந்திக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் அதைப் பெருமளவுக்குக் குறைத்திருக்கிறோம், முழுமையாக இல்லையென்றாலும் பெருமளவுக்குக் குறைத்து இருக்கிறோம்

1967-ஆம் ஆண்டில் மனுநீதித் திட்டம் என்ற திட்டத்தினை இராமநாதபுரம் மாவட்டத்திலே தொடங்கி இன்றைக்குத் தமிழகம் முழுவதும் பரவலாக நடத்திக் கொண்டு வருகிறோம். திங்கள்தோறும் வாரமொரு நாள் குறிப்பிட்டு மாவட்ட அதிகாரிகள் அனைவரும் எல்லாக் கிராமங்களுக்குச் செல்கிறார்கள். ஒரு நாளிலே கிட்டத்தட்ட 1,500 கிராமங்களுக்கு அதிகாரிகள் சென்று மக்களைச் சந்தித்து அவர்களுடைய மனுக்களைப் பெற்று உடனடியாகக் கோரிக்கைகளைத் தீர்த்து வைக்கிறார்கள். இந்த மனுநீதித் திட்டம் இந்த ஆட்சியிலே உருவாக்கப்பட்டு செம்மையாக நடைபெற்று வருகிறது.

கிராமப்புறத்திலும், நகர்ப்புறத்திலும் இருக்கின்ற சாதாரணக் குடிமகனுக்கு உதவிட பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் திட்டம்

7-க.ச.உ.(அ.தீ.) பா-2