உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

உருவாக்கப்பட்டு-இருக்கின்ற நகராட்சிகளின் மொத்த எண்ணிக்கை 99 ஆகும். திரு.கந்தப்பன் அவர்கள் தலைமையில் இந்த அரசினுடைய ஒத்துழைப்போடு அந்தத் திட்டத்தை செவ்வனே நடத்தி வருகிறோம், தீவிரமாகப் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறோம். மொத்தம் உள்ள நகராட்சிகள் 99-லே ஏற்கெனவே வெள்ளையன் காலத்திலிருந்து 1967-ஆம் ஆண்டு வரையில் 30,35 நகராட்சிகள்தான் தண்ணீர் வசதியைப் பெற்றிருந்தன. ஆனால் இன்று மொத்த நகராட்சிகள் 99-ல் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது 80 என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆலந்தூர், பல்லாவரம், ஆம்பூர், வாணியம்பாடி, பண்ணுருட்டி, ஆத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, அருப்புக்கோட்டை, இராமனாதபுரம் ஆகிய பத்து இடங்களில் இன்றைக்கு இந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆய்வு வேலை நடந்து வருபவை, அம்பத்தூர், கத்திவாக்கம், மாதவரம் ஆகிய கிய இடங்களாகும்.

"அவுட் லைன் புரப்போஸலு"க்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள இடங்கள் நெல்லிக்குப்பம், பொன்மலை, சிங்காநல்லூர் ஆகியவை ஆகும். ஆய்வு மதிப்பீட்டுத் தொகையை, நிதிவசதி இல்லாததால் நகராட்சி செலுத்த முன்வராத இடங்கள், சீர்காழி, கொளச்சல் பத்மனாபபுரம் ஆகியவை ஆகும்.

இவைகள் மட்டுமல்லாமல், மொத்தம் இருக்கின்ற பேரூராட்சிகள் 641, இதில் இதுவரையில் குடிநீர்த் திட்டம் நிறை வேற்றப்பட்டவை 55. குடிநீர்த் திட்ட வேலைகள் நடந்து கொண்டிருப்பவை 27. ஆய்வு அனுமதிக்கப்பட்டவை 145. மிச்சம் 414. இதற்காக ஒரு தீவிரமான திட்டத்தை யோசித்துக் கொண்டிருக்கின்றோம். விரைவில், தமிழகத்தில் 7 ஆண்டுக் காலத்திற்குள்ளாக பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் இல்லாத கிராமம், பட்டிதொட்டி எதுவுமே இல்லை என்கின்ற உன்னதமான நிலையை நாம் நிறைவேற்றியே தீருவோம், அந்தச் சபதத்தை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். வீராணம் திட்டம் 1974ஆம் ஆண்டு இறுதியில் முடியக் கூடும் என்ற நல்ல செய்தியை நான் சென்னை நகரத்து மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நூற்பாலைகளைப்பற்றி மாண்புமிகு அமைச்சர் மாதவன் அவர்கள் விளக்கமாகச் சொன்னார்கள். நமது மாநிலத்தில் 14 நூற்பாலைகள்-சிக் மில்ஸ்-அவைகளை ஏற்று நடத்துவது என்று அரசு தீர்மானித்தது. கீழ்க்கண்ட மில்களை இதுவரையில்