உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

193

விழுந்து இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, மாவட்ட நீதிபதி தகுதியில் ஒருவர் நீதிவிசாரணைக்கு நியமிக்கப் பட்டிருக்கிறார். இவ்வளவும் நடைபெற்று இருக்கிறது

திருச்சியில் நடந்த சம்பவம் குறித்து எனக்கு வந்த தகவல்களைக் கூறினேன். இன்னும் தகவல்களைச் சேகரியுங்கள் என்று டாக்டர் ஹாண்டே அவர்கள் சொன்னார்கள். நான் நிராகரித்தேனா, புறக்கணித்தேனா, நீங்கள் யார் சொல்ல, நான் யார் கேட்க என்று சொன்னேனா, பல பேர் தகவல்கள் கூறினார்கள். அமைச்சர் மாதவன் மூலமாக பிரின்சுபாலுடன் தொடர்பு கொண்டு சில விவரங்களைத் தந்தேன். நீதிவிசாரணை வைக்கப் பட்டிருக்கிறது. நீதி விசாரணை வைக்கப்பட்டபிறகும் இன்று ஹர்த்தால் நடத்தப்பட்டிருப்பதாக அறிகிறேன். அமைதியாக நடைபெற்று இருக்கிறது.

நேற்று இங்கே ஒரு அறிக்கை, காங்கிரஸ் மாணவர்களால் அல்ல, சுதந்திரா மாணவர்களால் அல்ல, கம்யூனிஸ்ட் மாணவர்களும், அ.தி.மு.க. மாணவர்களும் சேர்ந்து வேலைநிறுத்தம் செய்வோம் என்று சொன்னார்கள். எல்லாக் கல்லூரிகளிலும் அல்ல. சட்டக்கல்லூரியில் நடைபெற்று இருக்கிறது. சட்டக்கல்லூரி மாணவர்கள் 5, 6 பேர் பிற்பகலில் குறளகத்தின் உள்ளே சென்று இருக்கிறார்கள். இங்கே எதற்காக வருகிறீர்கள் என்று கேட்ட போது அங்கேயிருக்கும் கேன்டீனில் நாங்கள் காப்பி சாப்பிடப் போகிறோம் என்று சொல்லி உள்ளே நுழைந்து, அங்கே மாட்டப்பட்டிருக்கும் முதலமைச்சர் படம்- என்னுடைய படத்தை உடைத்து நொறுக்கிப் போட்டுவிட்டுப் போய் விட்டார்கள். நான் கேட்கிறேன். நாம் மாணவர்களுக்காகப் பரிந்து பேச வேண்டியதுதான். மாணவர்கள் மென்மையாக நடத்தப்பட வேண்டியவர்கள்தான். அதற்காக இதே மாதிரியான காரியங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே போனால், மாணவர்கள் என்ற ஒரே ஒரு தலைப்பின்கீழ் வருகிற காரணத்தால் எல்லா வன்முறைகளையும் நாம் அனுமதித்துக்கொண்டே போனால், நாடு எங்கே போய் நிற்கும்? அதைத் தயவுசெய்து அனைவரும் சிந்திக்கவேண்டும்.

என்னுடைய படம் உடைக்கப்பட்டதற்காக நான் கவலைப் படவில்லை. ஆயிரம் படத்தை உடைக்கட்டும் கவலையில்லை. என்னுடைய படத்தின்மீது சாணத்தை வீசுகிறார்கள். அதற்காக நான் கவலைப்படவில்லை. என்னுடைய படத்தின்மீது சாணத்தை