194
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
வீசிவிட்டு, கையை அசிங்கப்படுத்திக்கொள்கிறார்களே என்றுதான் கவலைப்படுகிறேன். கையையும் கருத்தையும் அசிங்கப்படுத்திக் கொள்கிறார்களே, எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்களே என்ற கவலைதானே தவிர வேறு அல்ல. சட்டக் கல்லூரி மாணவர்கள் ஹர்த்தாலில் ஈடுபட்டால், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், அமைதியாக ஊர்வலம் செல்ல வேண்டும். அப்படியில்லாமல், குறளகத்தில் நுழைவானேன், அங்கேயிருக்கும் படத்தை உடைப்பானேன்? யாராவது தடுத்தால் குறளகத்தில் போலீசார் நுழைந்து அடித்தார்கள் என்று செய்தி வரும். நாளைக்கு ஒத்திவைப்புத் தீர்மானம் வரும். பத்திரிகைகளில் செய்தி வேறு பெரியதாகப் போட்டாலும் போடலாம். மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவதால் அவர்களின் எதிர்காலம் பாழடிக்கப்படுகிறதே என்றுதான் கவலைப்படுகிறேன்.
மாணவர்கள் கிளர்ச்சி தமிழ் நாட்டில் மட்டும் நடப்பதாக யாரும் எண்ணிக் கொள்ளக்கூடாது. உலகம் முழுவதும் நடை பெறுகிறது. இங்கேயும் நடைபெறுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்தக் கிளர்ச்சி நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. டெல்லிப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கிளர்ச்சி. துணைவேந்தர் தாக்கப்பட்டார், பல்கலைக்கழக அலுவலகத்தை மாணவர்கள் கைப்பற்றிக்கொண்டார்கள், காவலர் தலையிட்டார்கள் ஒரு மாதகாலமாக அந்தப் பல்கலைக்கழகம் மூடிக்கிடக்கும் நிலைமை, பஸ்கள் தீயிடப்பட்டன, ஆகிய சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன
கௌகத்தி பல்கலைக்கழகம், அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் மொழிக்கிளர்ச்சி, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன, எங்கும் வன்முறைச்செயல்கள், பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு முழுவதும் கலவர சூழ்நிலை. இப்படி மாணவர்களைப் பற்றிய செய்திகள் வராமல் இல்லை. ஆந்திரப் பிரதேசத்தில், டாக்டர் ஹாண்டே அவர்கள் குறிப்பிட்டதுபோல், முல்கி விதிகளைக் குறித்து, ஆந்திரா தெலிங்கானா பகுதிகளில் மாணவர்களின் வன்முறைக்கிளர்ச்சி, கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுக் கிடக்கின்றன, அரசு சொத்துக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் அதிகமான சேதம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.
உத்திரப் பிரதேசத்தில் 40 நாட்களாகப் பல்கலைக்கழகங்கள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. வன்முறைக்