உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

கிளர்ச்சிகள் நடைபெற்று இருக்கின்றன. இ நிலையங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

195

காவலர் கல்வி

பஞ்சாப்-ஹரியானா மாநிலங்களில் சினிமா டிக்கெட்டின் விலை குறைக்கப்பட வேண்டுமென்று மாணவர்கள் தொடுத்த கிளர்ச்சியின் காரணமாக கல்வித் துறையும் பொது வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று செய்தி வந்திருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் பல பேர் சாவு, காயமுற்றோர் பலர், இன்னும் அங்கே அமைதி நிலைமை ஏற்படவில்லை. இங்கே மத்திய போலீஸ் அழைக்கப்பட்டதற்கே குறை கூறிய பொன்னப்ப நாடார் அவர்களுக்குச் சொல்லிக்கொள்வேன், அங்கே ராணுவமே வரவழைக்கப்பட்டிருக்கிறது. ஏழு வாரத்திற்கும் மேலாகக் கல்வி நிலையங்கள் மூடிக் கிடக்கின்றன.

குஜராத்தில் மாணவர்கள் கிளர்ச்சி. துணைவேந்தரை ராஜினாமா செய்யவேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். அந்தக் கிளர்ச்சியின் சூடு தாங்காமல் துணைவேந்தரே உண்ணாவிரதம் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தடியடி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு, சாவு ஆகிய நிலைமைகளால் ஆ நிலையங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன.

கல்வி

பீகார் மாநிலத்தில் பாட்னா பகுதியில் மாணவர்கள் கிளர்ச்சியை ஒட்டி வன்முறைச்சம்பவங்கள், துப்பாக்கிச் சூடு, சாவு, பல்கலைக்கழகங்களில் அடிக்கடி தகராறு, பல நாட்களாக மூடப்பட்டுக் கிடக்கின்ற நிலைமை.

வங்காளத்தில் சென்ற இரண்டு, மூன்று ஆண்டுக் காலமாகவே வன்முறைச் செயல்களின் காரணமாக பல்கலைக்கழகங்கள் பாதிக்கப்பட்டுக் கிடக்கின்றன. இது அனைவரும் அறிந்த ஒன்று.

கேரளத்தில் தனியார் துறை கல்லூரி நிர்வாகத்தினருக்கும் அரசுக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாகப் பல கல்லூரிகள் இரண்டு திங்களுக்கு மேல் மூடிக்கிடக்கின்றன. அதனை ஒட்டி கிளர்ச்சிகள் உருவாகியதை நாம் யாரும் மறந்து விடவில்லை.

இந்த நம்பிக்கை கோருகிற தீர்மானத்தில் பேசியவர்களும் எல்லா கட்சிகளும் ஒரு கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். மாணவர்கள் பொதுக்கோரிக்கைகளுக்காக, ஒரு மொழியால் தாங்கள் பாதிக்கப்படுகிறோம். அல்லது பயிற்சி