உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

நீதிகளை வகுப்பதற்கும் முன்பு; காடுகளில் அவர்கள் உலவிக் கொண்டிருந்தபோது - உலகமே வியந்து உச்சிமேல் வைத்து மெச்சத்தக்க அரசியல் நெறி பெற்றுத் திகழ்ந்தது தமிழகம் !

நமது மூதாதையர் யவனம் வரை தொடர்பு கொண்டிருந்தனர் - நமது மூதாதையர் சீனம் வரை சென்று திரும்பினர் - தூரக்கிழக்கு நாடுகளில் கலாச்சாரத் தொடர்பு மேற்கொண்டிருந்தனர்.

அந்த உன்னதமான மரபுக்கு ஏற்ற வகையில் நம்மைத் தயார்படுத்திக்கொள்ள - குறைந்த அளவு 50 ஆண்டுகளாவது ஆகும் !

இன்னும் நமது மொழியை இலக்கியச் செறிவுள்ளதாக ஆக்கி -நமது பொருளாதாரத்தைச் சீராக்கி-உரிமைகளை நிலைநாட்டி-இந்த நாட்டுத் தமிழர்களைத் தமிழ்ப் பரம்பரைக்குச் சொந்தக்காரர்களாக்க இன்னும் 50 ஆண்டுகளாவது ஆகும்!

வெறும் அரசியல் நடத்த-1967ல் ஆட்சி அமைக்க மட்டும் நமது கட்சி இருக்கிறது என்று நினைக்காமல்-1967-க்குப் பிறகும் தொடர்ந்து 50 ஆண்டுக் காலத்திற்காவது நமது பணி இருக்கிறது என்ற கடமை உணர்ச்சி நம் மனதில் ஆழப் பதியவேண்டும்.

1967 மட்டும் நம் கண் முன் நிற்பதென்றால்-1967ல் ஆட்சி பீடம் ஏறுவது மட்டும் நமது நோக்கம் என்றால்- அதற்கு யாரைப் பிடிக்கவேண்டுமோ, அவர்களைப் பிடித்து, எதைக் கொடுக்கவேண்டுமோ, அதைக் கொடுத்து, யாரை அணைத்துப் பேச வேண்டுமோ, அவர்களை அணைத்துப் பேசினால் அது ஒன்றும் முடியாத காரியமல்ல. ஆகவே, அமைச்சரவை அமைப்பது மட்டுமல்ல நமது நோக்கம். தமிழ் மக்கள், தமிழ் மரபைப் புரிந்துகொண்டு. தமிழ் வரலாற்றைப் புரிந்துகொண்டு, புதிய வரலாற்றை, புதிய செய்தியை, புதிய பண்பை உலகுக்கு வழங்க வேண்டும் என்பதற்குத்தான் நாம் பணியாற்றுகிறோம்.

ஐ.நா.சபை என்று உலகத்திலுள்ள நாடுகளை எல்லாம் ஒன்று சேர்த்து, எல்லாக் கொடிகளையும் பறக்கவிட்ட பிறகும், சர்வதேச ஒற்றுமையை சில நோக்கங்களில் காண முடியாமல் நாம் தத்தளிக்கிறோம். ஆனால், இந்த உலக ஒருமைப்பாட்டை-