உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

215

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற அரியதோர் கருத்தைத் தமிழ் மரபு தந்தது.

அதுமட்டுமல்ல 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று தமிழர்கள் தரணியாண்ட காலத்திலேயே தமிழகம் கூறியது. இவை போன்ற கருத்துக்களை, பண்புகளை மீண்டும் தமிழகம் உலகுக்குத் தரவேண்டும். அப்போதுதான் தமிழினம் தலைநிமிர்ந்து வாழும்; வாழும்; புதிய வ வரலாற்றை, புதிய அத்தியாயத்தைச் சமைக்கும். அவ்விதம் சமைக்கத் தக்கவாறு தமிழினத்தை ஆக்கும் பொறுப்பு- காலத்தின் கரத்தாலே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, தமிழ் மரபு காப்போர் அமரவேண்டுமென்பதற்காகத்தான் தி.மு.கழகம் ஆட்சியில் அமரவேண்டும் என்கிறோம். தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் மரபு இவைகளைக் காப்பாற்றும் புதிய அரசு-புதிய ஆட்சி தோன்றவேண்டும்."

இதைத்தான் அண்ணா அவர்கள் விருகம்பாக்கம் மாநாட்டில் பொதுத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற அந்த மாநாட்டில், எடுத்துரைத்தார்கள்.

அண்ணா அவர்கள் விரும்பிய தமிழ் மரபைக் காப்பாற்ற, தமிழ்ச் சமுதாயத்திற்குப் பணியாற்ற, தமிழ் மொழிக்கு ஏற்றம் தர அண்ணா அவர்கள் வாழ்ந்த காலத்திலும், அண்ணா அவர்களுடைய மறைவுக்குப் பிறகும் இந்த அரசு பணியாற்றி இருக்கிறதா இல்லையா என்பதற்கு நிறையப் புள்ளிவிவரங்களை நாம் பெற்றிருக்கிறோம், சான்றுகளை உடையவர்களாக நாம் இருக்கிறோம் ; என்றாலும் ஒன்றிரண்டை நினைவுபடுத்த நான் விரும்புகிறேன்.

தமிழ் நாடு என்று இந்த மண்ணிற்குப் பெயர் வைத்தது, அண்ணா அவர்கள் விருகம்பாக்கம் மாநாட்டில் பேசிய பேச்சின் எதிரொலியாகும்.

வள்ளுவருக்குச் சிறப்புத் தருகிற வகையில் பேருந்து வண்டிகளில் எல்லாம், தமிழகத்தில் உள்ள பயணிகள் விடுதிகளில் எல்லாம் திருக்குறளின் மணம் பரப்புகின்ற பணியைச் செய்தது அண்ணா அவர்கள் விருகம்பாக்கம் மாநாட்டுப் பேச்சின் எதிரொலியாகும்