218
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
இருந்து பணியாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்களுடைய கொள்கையுமாகும். ஆகவே, சமுதாய இழிவுகளை முதலில் நீக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவுதான் இன்று அர்ச்சனை செய்கிற தகுதி பெற்றிருக்கிற ஹரிஜனச் சகோதரராக இருந்தாலும் அவர்களும் ஆலயத்திற்குள் சென்று அர்ச்சிப்பதற்கு உரிமை படைத்தவர்கள் என்ற சட்டத்தைச் செய்திருக்கிறோம் என்றால், அது சாதாரண விஷயமல்ல. ஒரு ஹரிஜன சகோதரருக்கு அர்ச்சனை செய்கிற வேலைதான் பெரிய வேலையா என்று கேட்கலாம். ஆனால் அது எவ்வளவு பெரிய சமுதாயப் புரட்சி என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
இன்றைக்கு அம்பேத்காருடைய பெயரால் சென்னை மாநகரத்தில் ஒரு கல்லூரியை உருவாக்குகிறோம். அந்தக் கல்லூரி -ருவாவதற்கு - வேறு பல இடங்களில் கல்லூரிகள் உருவாகும் நேரத்தில் கட்டவேண்டிய மொத்தப் பணத்தை மற்றவர்கள் கட்டினால்தான் அங்கு கல்லூரிகளுக்கு அனுமதி கொடுப்போம் என்று நமது கல்வி அமைச்சர் அவர்கள் மிகவும் கண்டிப்பாக இருந்தாலும் கூட, அம்பேத்கார் கல்லூரி என்ற மாத்திரத்திலே அந்தக் கல்லூரி என்ற சலுகை அளித்து இன்றைக்கு சென்னை மாநகரத்தில் அம்பேத்கார் பெயரால் கல்லூரி வருகிறது.
தில்லையாடி வள்ளியம்மையும் ஹரிஜன சகோதரிதான் அந்த அம்மையின் தியாகத்தை நினைவுபடுத்துவதற்காக இன்றைக்குத் தில்லையாடியிலே வள்ளியம்மை நகர் ஒன்று கண்டு அந்த அம்மையாரோடு தென் ஆப்பிரிக்காப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த ஹரிஜன சகோதரர்கள்-நாகப்பன், நாராயணசாமி இவர்களுக்கெல்லாம் அங்கு நினைவுச் சின்னங்கள் எழுப்பியிருப்பதும் இந்த அரசுதான் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆலயங்களில் அறங்காவலர்களை நியமிக்கும்போது அந்த அறங்காவலர்களில் ஒருவர் நிச்சயமாக ஹரிஜன வகுப்பை சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்று சட்டம் செய்திருப்பதும் இந்த அரசுதான் என்பதை மறந்துவிடக்கூடாது
அதைப்போலவே, பின்தங்கிய சமுதாய மக்களுக்காகப் பாடுபடும் இந்த அரசு அவர்களுக்காக ஒரு நலக் குழுவை அமைத்து, அதனுடைய சிபார்சுகளை ஏற்று எந்த அளவிற்கு