உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

219

நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறது என்பதையும் அனைவரும் நன்றாக உணருவார்கள்.

-

காலையில் பேசிய நண்பர் வடிவேலு அவர்கள் கூடச் சான்னார்கள் 18 சதவிகிதம் என்று ஹரிஜனங்களுக்கு ஒதுக்கியிருக்கிறீர்கள். ஆனால் இந்த 18 சதவிகிதத்தை ஹரிஜனங்களால் உத்தியோகங்களைப் பெறமுடியவில்லை என்று சொன்னார்கள். நான் அவர்களுக்குச் சொல்வேன். சில இடங்களில் ஹரிஜனத் தோழர்கள், சகோதரர்கள் வராமல் அந்த இடங்கள் நிறைவு செய்யப்படாமல் இருக்கிற குறை இருக்க முடியுமே தவிர, வந்து அவர்களுக்கு இல்லை என்ற குறை எங்குமே ஏற்பட்டது கிடையாது. ஓர் உதாரணம் உங்களுக்குச் சொல்ல முடியும்.

கடந்த நான்கைந்தாண்டுக் காலத்தில், நம்முடைய தமிழ் மாநிலத்தில் க்ரூப்-1 சர்வீஸ் எழுதுகிறார்களே, தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தேர்ந்தெடுக்கிறதே, அதிலே எப்படிப் பட்டவர்கள் இன்றைக்கு டெப்டி கலெக்டர்களாக, டெப்டி சூப்பரின் டென்ட்டென்ட்களாக, ஜே.ஸி.டி.ஓ.-க்களாக, டெப்டி ரெஜிஸ்ட்ரார்களாக, அசிஸ்டென்ட் யார் யார் இந்த நான்கைந் தாண்டுக் காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். வகுப்புகளைப் பிரித்துச் சொல்கிறேன் என்பதற்காக யாரும் வருத்தப்படக் கூடாது. மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், வகுப்புகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிற காரணத்தால் பிரிக்கப்பட்டால்தான் பின்தங்கியோர், தாழ்த்தப்பட்டவர்கள் என்று தெரியும் என்கிற காரணத்தால் நான் அதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

கிட்டத்தட்ட 98 அல்லது 99 பேர்கள் 1967-லிருந்து இந்த ஆண்டு வரையில் சர்வீஸ் கமிஷனால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஆதி திராவிடர்கள்-தாழ்த்தப்பட்டவர்கள்- டெபுடி கலெக்டர் வேலைக்கு 5 பேர், டெபுடி சூப்பரிண்டென்டென்ட் ஆப் போலீஸ் 4, ஜே.சி.டி.ஓ.3, டெபுடி ரிஜிஸ்டிரார் 4, சிஸ்டெண்ட் கமாண்டணிட் (எஸ்.ஏ.பி)1, டிஸ்ட்ரிக்ட் ரிஜிஸ்டிரார் 1, ஆக மொத்தம் 18 பேர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த 99 பேர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.