உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அண்ணாவின் அடுத்த கொள்கை சமதர்மம்; சமதர்மத் திட்டங்களை நாம் நிறைவேற்றியிருக்கிறோமா இல்லையா என்பதைச் சமதர்மத்தின் அடிப்படையில் நான் பல முறை இங்கே விளக்கியிருக்கிறேன். வரவு செலவுத் திட்டத்தைப் பற்றிப் பேசிய நேரத்திலும், முன்பு ஒரு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்த நேரத்திலும், நான் வெகு விளக்கமாகச் சொல்லியிருக் கின்றேன். நிலச் சீர்திருத்தம், சமதர்மத்தின் அடிப்படையில் - ஆறு லட்சத்திற்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்குப் பட்டா அளித்தது. இதற்கு முன்பு உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற ஒரு சட்டம். குடியிருப்புமனைச் சட்டத்தின் மூலம் ஏறத்தாழ இரண்டு லட்சம் மக்களுக்குக் குடியிருப்பு மனையைச் சொந்தமாக் கியது. பஸ்களை தேசியமயமாக்கச் சட்டம் கொண்டு வந்தது, இந்தியாவிலேயே முதல் முறையாகத் தொழிலாளர்களுக்கு முதலீட்டில் பங்கும் நிர்வாகத்தில் பொறுப்பும் தமிழ்நாட்டில் அளித்திருப்பது, பஸ் தொழிலாளர்களுக்கு ஊக்கப் போனஸ் திட்டத்தை அளித்து அவர்களுடைய பாராட்டைப் பெற்றிருப்பது, இவைகள் எல்லாம் சமதர்மத்தின் அடிப்படையில் நிறைவேற்றப் பட்டவைகளாகும்.

பல நண்பர்கள் எடுத்துச் சொன்னதைப் போல, கண்ணொளி வழங்குதல், பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வளித்தல், கை ரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்குதல், இவைகளையெல்லாம் என்னுடைய பிறந்த நாள் விழாக்களில் நாம் சாதனைகளாகச் செய்து இருக்கிறோம்.

ஒரு நண்பர்கூடச் சொன்னார். அடுத்த ஆண்டு முதலமைச்சருக்குப் பிறந்த நாளே வரக்கூடாது ; அது ரொம்ப ஆபத்தாக இருக்கிறது என்றுகூடச் சொன்னார். நம்முடைய நண்பர் தம்பி தேவேந்திரன் அவர்கள், அவர் கூறியது பற்றிக்கூட ரொம்ப வருத்தப்பட்டுக்கொண்டார், இப்படியெல்லாம் பேசலாமா என்று.

எனக்கு அடுத்த ஆண்டு பிறந்த நாள் வந்தாலும் பரவாயில்லை; அல்லது நினைவு நாள் வந்தாலும் பரவாயில்லை. ஆனால் அந்த நாளைக்குள்ளாக நாம் என்னென்ன செய்ய வேண்டும், என்னுடைய அமைச்சரவை நண்பர்களின்