கலைஞரின் சட்டமன்ற உரைகள்
221
வகுப்பைச் சேர்ந்தவர்கள் டெபுடி கலெக்டராக இருந்ததே கிடையாது.
மூப்பனார் : டெபுடி கலெக்டர் 1, தொண்டமான் டெபுடி கலெக்டர் 1, வடுகர் டெபுடி கலெக்டராக ஒருவர், டி.எஸ்.பி.ஒருவர், ஆக இரண்டு பேர்கள்.
தேவாங்கர் : டி.எஸ்.பி. ஒருவர் ; வலையர் : ஜே.சி.டி.ஓ. ஒருவர் ; சக்கிலி : ஜே.சி.டி.ஓ. ஒருவர் ; யாதவர் : ஜே.சி.டி.ஓ. ஒருவர் ; டெபுடி ரிஜிஸ்டிரார் 2, டிவிஷனல் பையர் ஆபீசர்1, ஆக மொத்தம் 4 பேர்கள் :சேனைத் தலைவர் : டெபுடி ரிஜிஸ்டிரார் 1 செட்டி பாலாஜி : டெபுடி ரிஜிஸ்டிரார் 1. வேட்டுவக் கவுண்டர் : டெபுடி ரிஜிஸ்டிரார் 1, மருத்துவர் : டெபுடி ரிஜிஸ்டிரார் 1, ஒட்டர் டிஸ்டிரிக்ட் ரிஜிஸ்டிரார் ஒருவர். ஆக, இப்படி மிக மிகப் பின்தங்கிய சமுதாயத்தில் உள்ளவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் இவர்களுக்காக இந்த அரசு பாடுபட்டு வருகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன அடையாளச் சின்னம் வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
இங்கே பேசியவர்கள், இந்த ஆட்சி- பின்தங்கிய மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுகிறது என்பதற்கு என்ன அளவுகோல் என்று கேட்டார்களே, இதைவிட வேறு எந்த அளவுகோலை வைத்து, இந்த இயக்கம் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, நடுத்தர மக்களுக்காகப் பாடுபடும் என்று முழக்கமிட்டு ஆரம்பிக்கப்பட்டதே, அந்த முழக்கம் இன்று செயல்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?
தமிழ் நாட்டில் நீதிமன்றம் உருவான பிறகு. நீதிமன்றச் சரித்திரத்திலேயே இந்த ஆட்சிக் காலத்தில்தான் அரிசன வகுப்பைச் சேர்ந்த ஒரு சகோதரர் இன்றைக்கு நீதிபதியாக வீற்றிருக்கிறார் என்பதை யாராவது மறுக்க முடியுமா? (ஆரவாரம்) இவைகள் எல்லாம் சமுதாயத்தில் சமத்துவத்தை உருவாக்க- சமுதாயத்தில் புரையோடியிருக்கிற
பல
கொடுமைகளை நீக்குவதற்கு அறிஞர் அண்ணா அவர்களுடைய வழியில் நின்று இந்த அரசு இதுவரையில் நடத்தியிருக்கிற அருமையான சாதனைகளாகும்.