உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

என்ற அளவில் மாநில அரசின் மீது குற்றம் சாட்ட இதை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை நான் நிச்சயமாக விரும்பவில்லை. மாநில அரசு விலைவாசி உயர்ந்திருப்பதை உணர்கிறது. நாங்கள் மறுக்கவில்லை. “அப்படித்தான் உயரும், சினிமாவுக்கு க்யூ நிற்கவில்லையா, அதைப்போல அரிசி வாங்க க்யூ நில்லுங்கள்” என்று இந்த அரசில் உள்ள அமைச்சர்கள் யாரும் பேசமாட்டார்கள். சினிமா டிக்கெட் விலை உயரவில்லையா, அந்த டிக்கெட்டை வாங்கி படம் பார்க்கவில்லையா, அதைப்போல உணவுப் பண்டங்களின் விலையும் உயர்ந்திருக்கிறது, ஆகவே, அதை வாங்கிச் சாப்பிடுங்கள் என்ற அலட்சியப் போக்கில் இந்த அரசிலே உள்ள யாரும் பேசுவதற்குத் தயாராக இல்லை. விலைவாசி உயர்ந்திருப்பதை ஒத்துக்கொள்கிறோம். ஆனால் எல்லா மாநிலங்களும் இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை நாம் தயவுசெய்து மறந்துவிடக்கூடாது. அதை மறந்து விட்டு இந்த மாநில அரசின் மீது மாத்திரம் பழி போடுவது சரியானது அல்ல என்பதற்காகத் தான் இந்த விவரங்களை நான் எடுத்துச் சொன்னேன்.

உற்பத்தி குறைந்து பணப் புழக்கம் அதிகமானால் விலைகள் ஏறும். அது ஒரு வாதம், உற்பத்தி அதிகரிக்கப்பட்டு பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டால் விலைகள் குறையும். அதுவும் ஒரு வாதம். உற்பத்தி என்பது வேளாண்மைத் துறையிலே மட்டும் குறிப்பிடப்படுவது அல்ல. தொழில் துறையிலும் உற்பத்தி தேவை என்பதைக் குறிக்கின்ற வாதம்தான் அந்த வாதம் வேளாண்மைத் துறையில் அதிக உற்பத்தி செய்ய வேண்டுமென்றால், அந்த உற்பத்திக்குத் தேவையான உரம், டிராக்டர், மற்றும் ஏனைய சாதனங்கள் எல்லாம் விவசாயத் தொழிலிலே ஈடுபட்டிருப்பவர்களுக்குக் கிடைக்க வேண்டும். இத்தகைய மூலப் பொருட்களை, விவசாய உற்பத்திக்கு அத்தியாவசியமான பொருள்களை விநியோகிக்கிற அதிகாரத்தையும், அதுபற்றிய கொள்கைகளை வகுக்கின்ற உரிமையையும் படைத்திருப்பது யார்? மாநில அரசா? மத்திய அரசா? இந்தக் கேள்விக்கு நாம் பதில் காணவேண்டாமா? அதேபோல் தொழில் உற்பத்திக்கு வேண்டிய மூலப்