கலைஞரின் சட்டமன்ற உரைகள்
229
பொருட்களை இறக்குமதி செய்கிற அல்லது செய்வதற்குரிய லைசென்ஸ் கொடுக்கின்ற அதிகாரமும், தொழில் கொள்கைகளை வகுக்கிற அதிகாரமும், இந்தத் தொழில்கள் பொதுத் துறையிலோ அல்லது கூட்டுறவுத் துறையிலோ இருக்க வேண்டுமென்ற முடிவைச் செய்கின்ற அதிகாரமும் மத்திய அரசினுடைய கையிலே இருக்கிற
"The increase in prices of commodities raises costs of pro- duction of goods in general and this has impact on prices which in turn impinges on our wage-level and State and Central resources. We would therefore urge that Government of India should set up a Com- prehensive Taxation Enquiry Commission to look into this whole question and suggest solutions."
ட்டுமொத்தமான ஒரு வரிக் கொள்கைக்கான ஒரு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டாகவேண்டும் என்ற கருத்தை நான் தேசிய வளர்ச்சிக் குழு மாநாட்டிலே எல்லா முதலமைச்சர்களுக்கும் முன்பாக இந்தியப் பிரதமர் முன்னிலையில் எடுத்துச் சொன்னேன். அது நல்ல யோசனை என்று பல மாநில முதலமைச்சர்களால் பாராட்டப்பட்டது. டெல்லியில் உள்ள பத்திரிகைகள் எல்லாம் எழுதின. தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகைகளும் அதைப்பற்றி எழுதின மேலவையிலும் சட்டப் பேரவையிலும் அதை வரவேற்றுப் பலர் பேசியதாக எனக்கு நினைவு. ஆனால் இதுவரையில் அதைப்பற்றிய சிந்தனையே மத்திய அரசிலே உள்ளவர்களிடம் எழுந்ததாக எனக்குத் தெரியவில்லை
உற்பத்தி பெருகினால் விலைவாசி குறையும் என்கிற ஒரு கருத்து உண்மையான கருத்துத்தான் என்றாலும்கூட அதுமாத்திரம் போதாது என்பதற்கு ஒரு முன் உதாரணம் நமக்கிருக்கிறது.
இந்தியாவின் பிரதமராகத் திருமதி.இந்திரா காந்தி அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட நேரத்தில் 72.3 மில்லியன் டன்னிலிருந்து 107.81 மில்லியன் டன்னாக உணவு தானியங்களின் உற்பத்தி இந்தியாவில் உயர்ந்தது. ஆனால் அப்படி உற்பத்தி அதிகரித்தும் விலைவாசி குறைந்ததா என்றால்