உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

இல்லை. உணவு தானியங்களின் விலை, குறிப்பாக கோதுமையின் விலை மேலும் அதிகமாயிற்று. அவ்வளவு உற்பத்திக்குப் பிறகும். அதற்குக் காரணமென்ன? அதிக உற்பத்தி செய்தால் மாத்திரம் போதாது. சரியான பொருளாதாரக் கொள்கை மானிட்டரி பாலிசி வகுக்கப்பட வேண்டும் என்பதைத்தான் அது கோடிட்டுக் காட்டுகிறது என்பதை நான் இந்த அவைக்குத் தெளிவாக்க விரும்புகிறேன்

வழங்கலும் தேவையும் (சப்ளையும், டிமாண்டும்) என்று நாம் வைத்துக்கொண்டு பார்த்தால் கூட, நோட்டு அடித்துக் குவித்துக் கொண்டிருப்போமானால், பற்றாக்குறை நிதி நிலை (டெபிசிட் பைனான்சிங்) ஏற்படுகிறது. அப்படிப் பற்றாக்குறை நிதிநிலை ஏற்பட்டால் விளைவு என்ன?

மிக அதிகமான பணப்புழக்கம் மிகக் குறைவான பண்டங்களைத் துரத்திக் கொண்டு போகிறது. அப்படித் துரத்தும்போது தானாகவே விலை உயருகிறது. இதை நாம் நெஞ்சில் பதியவைத்துக் கொள்ளவேண்டும். பண்டங்களின் உற்பத்தியைவிட, கரன்சி நோட்டுகளின் உற்பத்தி இன்று இந்தியாவில் அதிகமாக ஆகியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. 1966-லிருந்து 1972 வரை இந்தக் காலக்கட்டத்தில் பணப்புழக்கம் (Money Supply) இரட்டிப்பாக ஆகியிருக்கிறது. அதே நேரத்தில் விவசாயப் பண்டங்கள் போன்ற தேசிய ஆதாரப் பண்டங்களின் உற்பத்தி 52 கோடி ரூபாயிலிருந்து 40 கோடி ரூபாய்க்குக் குறைந்திருக்கிறது. நோட்டு அடிப்பது பணப் புழக்கம் இரட்டிப்பாக உயர்ந்திருக்கிறது. ஆனால் உற்பத்தி, தேசியப் பண்டங்களின் உற்பத்தி 52 கோடியிலிருந்து 40 கோடி ரூபாயாகக் குறைந்துவிட்டிருக்கிறது. எனவே பண்டங்களின் உற்பத்திக்கும் அதிகமாக நோட்டு அடித்துக் குவித்தால் விலை உயருமா உயராதா என்ற கேள்விக்கும் நாம் பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். 1972 ஏப்ரல் 8-ந் தேதி 8,247 கோடியாக இருந்த பணப்புழக்கம் 1973 ஏப்ரல் 27-ந் தேதி 9,545 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது 16 சதவிகிதம் பணப்புழக்கம் உயர்ந்திருக்கிறது.

-