உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

231

இதை எல்லாம் கருதித்தான் அறிஞர் அண்ணா அவர்கள் “நாட்டு வாட்டம் போக்கிட, நோட்டடித்தால் போதாது” என்று அன்றைக்கே தன்னுடைய தேர்தல் பிரகடனத்தைச் செய்தார்கள். அப்போது நாட்டு, நோட்டு என்று அடுக்குச் சொல் எழுதுகிறார் அண்ணா என்று சிலர் கேலி செய்தார்கள், கிண்டல் செய்தார்கள். ஆனால் இன்று அது எவ்வளவு பொருத்தம் என்பதை வு மக்களுக்கு, உலகத்திற்கு விளக்கிக் கொண்டிருக்கிறது.

விலைவாசி உயர்ந்துவிட்டது என்று கூறி அன்று நாங்கள் மாநில சர்க்காரை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லையா என்று கேட்டார்கள். நடத்தினோம்.

ஏனென்றால், அப்போது யாரும், இதற்கு மத்திய சர்க்கார் தான் பொறுப்பு என்று, எந்த அமைச்சர் பெருமக்களும் காரணங்களைச் சொன்னது கிடையாது. இன்றைக்குக் கூறியிருப்பதைப்போல சொல்கின்ற துணிவை அப்போதிருந்த காங்கிரஸ் அமைச்சர்கள் யாரும் பெற்றிருக்கவில்லை.

இன்றைக்கு என்ன நிலை? ஒரு தராசை எடுத்துக் கொண்டால் இரண்டு தட்டுகள் இருக்கின்றன. ஒரு தட்டில் உற்பத்தி நிலைமையையும் இன்னொரு தட்டில் கரன்சி நோட்டையும் வைத்துப் பார்க்கிறோம் என வைத்துக் கொள்வோம். கரன்சி நோட்டை அதிகமாக அடித்து உற்பத்தித் தட்டைப் பெருக் காமல் விட்டுவிட்டு, முள்ளைப் பிடித்துக்கொண்டிருக்கிற நம்மைப் பார்த்து, "ஒழுங்காகப் பிடிக்கவில்லை” என்றால் என்ன வேடிக்கை ! தராசு சமமாக இருக்கப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் இருக்கிறது. முள் ஆடுகிறதே என்றால் அது மாநில அரசின் குற்றம் அல்ல.

இங்கிலாந்து நாட்டில் “பிரைஸ் போர்டு” என்று ஒன்று அமைக்க வேண்டுமென்று ஒரு யோசனை கூறப்பட்டு அது அங்கே அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் அனுமதியைப் பெற்றுதான் பலரும் விலையை நிர்ணயம் செய்ய முடியும், உயர்த்த முடியும் என்ற நிலையைச் சுட்டிக்காட்டி நிர்வாகச் சீர்திருத்தக் குழு-ஏ.ஆர்.ஸி. அதன் தலைவர் திரு. ஹனுமந்தையா - இந்திய அரசுக்கு ஒரு சிபார்சு செய்தது. commission on prices, costs and tariffs என்ற ஒரு அமைப்பு