உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

233

காங்கிரஸ்-ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செயலாளர் சி.பி.ஐ. கட்சியைப் பார்த்துக் குறை கூறுகிறார். கேரளாவில் ஆளுகின்ற கட்சியாக இருக்கிற சி.பி.ஐ. கூட விலைவாசி ஏற்றத்திற்கு மாநில அரசு அல்ல காரணம், மத்திய அரசுதான் காரணம் என்று மத்திய அரசினைச் சுட்டிக்காட்டுகிறது.

அதைப்போலவே கடந்த வாரத்தில் டெல்லியில் பழைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஒன்பது கட்சிகள் கொண்ட கூட்டத்தில், இங்கே விலைவாசி உயர்வுக்காக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிற சுதந்திராக் கட்சியும் உள்ளிட்டு, விலைவாசி உயர்வுக்குக் காரணம் மத்திய அரசாங்கம்தான் என்பதாக அங்கே ஒரு தீர்மானத்தைப் போட்டு, திரு.கிருபளானி தலைமையில் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். பழைய காங்கிரஸ் கட்சி, தி.மு.க., சுதந்திராக் கட்சி, சோஷலிஸ்டுக் கட்சி, எஸ்.எஸ். கட்சி, முஸ்லீம் லீக் மற்ற கட்சிகள் எல்லாம் கூடி ஒரு தீர்மானம் நிறைவேற்றி, வருகிற 26-ஆம் தேதி ஒருமனதாக இந்தியா முழுவதும் மத்திய அரசைக் கண்டித்துக் கூட்டங்கள் நடத்த வேண்டும், அணிகளை நடத்த வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதைக் காண்கிறோம். இதுகூட விலைவாசி ஏற்றத்திற்கு மத்திய அரசுதான் காரணம் என்பதைப் புலப்படுத்த வில்லையா என்பதை நான் கேட்க விரும்புகிறேன்.

கூடி

விலைவாசி ஏற்றத்திற்கு மாநில அரசுதான் காரணம் என்று கூறுகின்ற எதிர்க்கட்சிக்காரர்களுக்குப் பதில் அளிக்கிற முறையில் கேரள மாநிலத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சியும் டெல்லியில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் நிறைவேற்றியிருக்கிற தீர்மானமும் எடுத்துக்காட்டாக இருக்கின்றன. இவைகளுக்கு எல்லாம் முத்தாய்ப்பு வைப்பதுபோல நிர்வாகச் சீர்திருத்தக் குழு இருக்கிறதே, ஹனுமந்தையா தலைமையில் அமைந்த ஏ.ஆர்.ஸி - நம்முடைய முன்னால் முதலமைச்சர் பெரியவர் பக்தவத்சலம் அவர்களுக்குக் கூட அதில் ஈடுபாடு உண்டு. அவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து தயாரித்த அந்த ஏ.ஆர்.சி. ரிப்போர்ட்டில் சென்டர் - ஸ்டேட் ரிலேஷன் பற்றிச் சொல்கிறபோது In fact, it is the policies of the Central Government that are responsible for inflation and increase in prices and the cost of என்று மத்திய அரசைக் குறை