உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

கூறித்தான் இது மத்திய அரசின் என்றுதான் நிர்வாக சீர்திருத்தக் குழு சுட்டிக்காட்டியிருப்பதையும் நாம் காண்கிறோம்.

இன்றைக்கு இந்தியாவிலேயே அமைதியாகத் திட்டங்களை ஒழுங்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிற, வறட்சி நிவாரணப் பணிகளைச் சரியாகச் செய்து கொண்டிருக்கிற மாநிலம் தமிழ்நாடுதான். உணவு நிலைமையில் தன்னிறைவு கண்டு இருக்கிற மாநிலமும் தமிழ்நாடுதான் என்ற சிறந்த பாராட்டுரையை சென்ற சில நாட்களுக்கு முன்னால் 7, 8 பாராளுமன்ற உறுப்பினர்கள், பல கட்சிகளையும் சார்ந்தவர்கள் அவர்களாகவே ஒரு குழு அமைத்து, இந்தியா முழுவதும் சுற்றிப்பார்த்து தென்னக மாநிலங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்லும்போது அந்தக் குழுவின் தலைவராக வந்த திரு.ஜோதிர் மாய் பாசு-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் பத்திரிகைக்கு அறிக்கை விடும்போது சொன்னார்- டைம்ஸ் ஆப் இந்தியா ஜூலை 30-ம் தேதி இஷ்யூவில் வந்திருக்கிறது. பசுமைப் புரட்சி என்பதற்குப் பதிலாக, வறட்சிப் புரட்சிதான் பல பகுதிகளில் நிலவி வருகிறது. இந்த வறண்ட பகுதிகளில் உத்தரப்பிரதேசம், பீகார், ஆந்திரா, ராஜஸ்தான் ஆகியவற்றில் 50 சதவிகிதத்திற்கு மேலாக வறட்சி நிவாரண வேலைகள் நடைபெறவில்லை. திட்டத்திற்கு மேலாக உற்பத்தி செய்து, பஞ்ச நிவாரண வேலைகளை முழுமையாக கடைப்பிடித்து வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்பதாக மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜோதிர்மாய் பாசு பத்திரிகையாளர் களுக்குத் தெரிவித்த கருத்து ஜூலை 30-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்திருக்கிறது.

உணவு

இன்னும் விலைவாசியைச் சரிப்படுத்த, நிலைமையைச் சரிப்படுத்தத் தவறிவிட்டதற்குக் காரணங்களைச் சொல்லும்போது நமது பெரியவர் மணலி அவர்கள் கூடச் சொன்னார்கள். "கள்ளக் கடத்தல்காரர்களை நீங்கள் பிடிக்க வேண்டும், கள்ளக் கடத்தல்காரர்களை நீங்கள் விடக்கூடாது" என்று நண்பர் மதி அவர்களும் இங்கே குறிப்பிட்டார்கள். கள்ளக்கடத்தல்காரர்களை நீங்கள் பிடித்திருப்பதற்கு நாங்கள் பாராட்டுகிறோம், மகிழ்ச்சி தெரிவிக்கிறோம் என்றார்கள். இந்த அரசு கள்ளக் கடத்தல்காரர்களையும், பதுக்கல்காரர்களையும் 16