உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

"தனிப்பட்ட குறைகளைத் தீர்க்க மனுநீதித் திட்டமும், கிராமங்களின் அல்லது ஒருசாராரின் பொதுவான குறைகளைத் தீர்க்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அமைப்பு முறைகளும் இருக்கின்றபோது, இடையிலே சிபாரிசு செய்ய ஆட்கள் தேவையில்லை. எனினும், ஜனநாயக அமைப்புகளின் வாயிலாக அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவர இயலாத சில பொதுப் பிரச்சினைகளும் இருக்கக்கூடும். அவைகளுக்குத் தீர்வுகாண மக்களின் பிரதிநிதிகளோ, தனிப்பட்டவர்களோ அதிகாரிகளை அணுகுவதில் தவறில்லை. நியாயத்திற்கு முரண்பாடான சில காரியங்களைச் சாதித்துக் கொள்ள, செல்வாக்குப் பெற்றவர்கள் அதிகாரிகளை அணுகக் கூடும். அவர்களது முறையீட்டில் அல்லது பரிந்துரையில் நியாயமிருந்தால், செய்யுங்கள்; நியாயமில்லையெனில் அப்படிப்பட்ட பரிந்துரைகளைச் செய்பவர்கள் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும், அதைச் செய்ய இயலாது என்று கண்டிப்பாகவே கூறிவிடலாம்.

சில நேரங்களில் நியாயங்களைச் செய்வதற்குக் கூட வீண் காலதாமதமும் அந்தத் தாமதத்தைத் தவிர்ப்பதற்கு இடையிலே நேர்மையற்ற சில காரியங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துவிடுகின்றன. அந்தத் தவறானக் காரியத்தைச் செய்யச் சாடை காட்டுகிற அதிகாரிகளானாலும், அல்லது அந்தத் தவறான காரியத்தைச் செய்ய அதிகாரிகளைத் தூண்டுகிறவர்களானாலும், இரு ரு சாராருமே சமூகத்

துரோகிகளாகக் கருதப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை".

அது

போலவே, அதிகாரிகள் சிலர் தங்கள் சொந்த நலனுக்காக, செல்வாக்கு பெற்றவர்களிடம் அல்லது மக்கள் பிரதிநிதிகளிடம் அணுகி அவர்கள் மூலமாக அரசுக்கு நிர்ப்பந்தங்களைத் தருவதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். அவ்வாறு தங்கள் நலன்களுக்கு பரிந்துரையாளர்களை ஏற்பாடு செய்துகொள்கிற அதிகாரிகள் யாரானாலும் அவர்கள் கண்டிப்பாக ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதையும் நான் திடமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களுடைய பொதுப் பிரச்சினைகள் தவிர, வேறு எந்தப் பிரச்சினைக்கும் நேரிடையாக அரசாங்க அதிகாரிகளை