உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

263

ஆளுங்கட்சி சார்பில் சொல்லப்படுகிற கருத்துக்க ளானாலும் தோழமைக் கட்சிகளின் சார்பில் சொல்லப்பட்ட கருத்துக்களானாலும், எதிர்க்கட்சிகளின் சார்பில் சொல்லப் பட்டாலும் அவைகளில் இந்த அரசு ஏற்றுக் கொள்ள முடிந்த கருத்துக்களை இயன்ற அளவிற்கு ஏற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்துகின்ற பணியை நாம் தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.

-

-

அருமை நண்பர் ஆலடி அருணா அவர்கள் பேசுகின்ற நேரத்தில் ஒன்றைச் சொன்னார்கள் இவர்கள் “அண்ணாவின் தம்பிகளா? அலிபாபா கூட்டமா” என்று கேட்டார். அவருடைய பேச்சில் நல்ல ஆற்றல் இருக்கும். விறுவிறுப்பு இருக்கும். இன்றைக்கு வேறிடத்தில் அவர் இருந்தாலும் அதை நான் மறந்துவிடுபவன் அல்ல. அவர் இந்த மன்றத்தில் என் பின்னால் இருந்து மாநில சுயாட்சி பற்றிப் பேசிய பேச்சு என் காதில் இன்றைக்கும் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது. நன்றாக சிந்தித்துப் பேசக்கூடிய அருணாவே நாட்டையாள்வது “அண்ணாவின் தம்பிகளா, அலிபாபா கூட்டமா” என்று - பேசி விட்டாரே என்று தான் நான் வருத்தப்பட்டேன். அலிபாபா கூட்டமா என்றால், அவர் இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிற தலைவரே கூட நடித்து வெற்றிகரமாக ஓடிய படம். (சிரிப்பு) அதிலே அலிபாபா என்ற கதாநாயகன் வேடத்தையே அவருடைய தலைவர்தான் போட்டார். (சிரிப்பு) அவரது தலைவர் கெட்டவன் பாத்திரம் எதையும் ஏற்று நடிக்க மாட்டார். உங்களுக்கே தெரியும். கெட்டவனாகவே நடிக்க மாட்டார். நல்லவனாகவேத்தான் நடிப்பார் (ஆரவாரம்).

திரு. ஆலடி அருணா : நான் அலிபாபா கூட்டம் என்று சொன்னது அலிபாபா கதையில் வருகிற கூட்டம் என்ற பொருளில் ஆகும் - இந்தி ஒழிக என்றால் இந்தி ஆதிக்கம் ஒழிக என்றுதான் பொருள். அதைப்போல அலிபாபா கதையில் உள்ள திருட்டுக் கொள்ளைக் கூட்டம் என்றுதான் பொருள்.

கூட்டம்

-

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : இந்தி ஒழிக என்றால் இந்தி ஆதிக்கம் ஒழிக என்று பொருள் என்றால்