உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

265

அடிப்படையிலே பேசி இருந்தாலும், அனைத்துக் கருத்துக் களிலும் இழை ஓடிக் கொண்டிருக்கிற இன்றைய தமிழகத்தின் உணவு நிலவரம் குறித்தோ அல்லது நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற பயங்கரமான மழையின்மை நிலவரம் குறித்தோ நாம் மாறுபாடான கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லை. பேசியவர்கள் எல்லாம் எடுத்துக் காட்டியதைப் போலவும், வானிலை அறிவிப்பின்படியும் நம்முடைய தமிழகத்தில் 100 ஆண்டுக் காலம் இல்லாத பயங்கரமான வறட்சி இந்த ஆண்டு ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் உணர்கிறோம். 65 சதவிகிதம் மழை இந்த ஆண்டு குறைந்துவிட்டது. இந்த மழை பொய்த்து விட்ட சூழ்நிலையை, அதனால் ஏற்பட்டிருக்கிற விளைவுகளை நாம் சந்திக்க, சமாளிக்க வேண்டியவர்களாக, இருக்கின்றோம்.

எதிர்க்கட்சித் தரப்பிலே பேசிய சில பேர் இந்த ஆண்டு மழை பொய்த்து விட்டது, சென்ற ஆண்டு இவ்வளவு மோசம் இல்லை. இருந்தாலும் சென்ற சம்பா அறுவடையிலே ஏன் விலை ஏறியது? இவைகளுக்கு நீங்கள் தருகின்ற பதில் என்ன என்றெல்லாம் கேட்டார்கள். கேட்டுவிட்டு அவர்களே சொன்னார்கள், தஞ்சையில் தடையை எடுத்ததுதான் இதற்கெல்லாம் காரணம், நீங்கள் தஞ்சை மாவட்டத்தில் தடையை எடுத்தது பெரிய தவறு, அதிலே ஏதோ ஊழல் நடந்துவிட்டது, அந்த ஊழலை நடத்துவதற்காகவே நீங்கள் தடையை எடுத்தீர்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டது. தடையை எடுக்க வேண்டுமென்று நிலக்கிழார்கள் மாத்திரமல்ல, நம்முடைய பெரியவர் மணலி போன்றவர்கள் கூட அறிவுரை கூறினார்கள். அவர் நிலக்கிழார் அல்ல. அல்லது, அவரது வரலாற்றைப் புரிந்து கொண்டவர்களுக்கு அவர் நிலக்கிழார்கள் பக்கம் நிற்கக் கூடியவர் என்கின்ற எண்ணமும் நிச்சயமாக ஏற்படாது. அப்படிப் பட்டவர்கள் எல்லாம் தஞ்சையில் தடையை தடையை எடுக்க வேண்டுமென்ற யோசனையை இந்த அரசுக்குச் சொன்னார்கள். தஞ்சையிலே உள்ள நிலக்கிழார்கள், வியாபாரிகள் மட்டுமல்ல, மற்ற மாவட்டத்திலேயுள்ள வியாபாரிகள், மற்ற மாவட்டத்திலே உள்ள வாங்கிப் புசிக்கிற மக்கள் அத்தனை பேரும் இந்தக் கோரிக்கையை எழுப்பினார்கள். என்ன காரணம்? மற்ற மாவட்டங்களில், தஞ்சை மாவட்டத்தை விட பல மடங்கு அரிசி