உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

விலை ஏறிவிட்டது. ஆகவே, இந்தத் தடையை எடுத்து, மற்ற இடங்களுக்கு உணவு தானியங்கள் புழக்கத்திற்கு வருமானால், விலை ஒரு சமநிலைக்கு வரும். ஆகவே, இந்தத் தடையை எடுத்துவிடுங்கள் என்று அரசுக்கு யோசனை கூறப்பட்டது. இப்படித் தடையை போடுவதோ, எடுப்பதோ என்பது சம்பா அறுவடையின்போது மாத்திரம் நடந்துவிட்ட சம்பவம் அல்ல.

1970ஆம் ஆண்டு தஞ்சையில் போக்குவரத்துக் கட்டுப்பாடு 8-1-70இல் விதிக்கப்பட்டது. பிறகு எட்டு மாதங்கள் கழித்து 15-9-70-ல் அந்தக் கட்டுப்பாடு எடுக்கப்பட்டு மற்ற மாவட்டங்களுக்கு அங்கிருந்து உணவு தானியங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டது என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அதைப்போலவே 1-1-1971இல் கட்டுப்பாடு போடப்பட்டு, பிறகு 9 மாதங்களுக்குப் பிறகு 5-10-1971இல் அந்தத் தடை எடுக்கப்பட்டது. பிறகு 5-11-1971இல் கட்டுப்பாடு போடப்பட்டு, 10 மாதத்திற்குப் பிறகு 14-9-1972இல் மீண்டும் கட்டுப்பாடு எடுக்கப்பட்டது. 18-1-1973இல் கட்டுப்பாடு போடப்பட்டு, 9 மாதத்திற்குப் பிறகு 6-10-1973இல் கட்டுப்பாடு எடுக்கப்பட்டது. அதைப் போலத்தான் 74ஆம் ஆண்டு 15-12-1973இல் தடை போடப்பட்டு 10-6-1974இல் தடை எடுக்கப் பட்டது.

திருமதி த. ந. அனந்தநாயகி : அவர்களுடைய புள்ளி விவரங்களிலேயிருந்து, குறுவை அறுவடை செய்த பிறகுதான் அப்பொழுதெல்லாம் தடை நீக்கப்பட்டது தெரிய வருகிறது ஆனால், இந்த ஆண்டு, ஜூன் மாதத்திலேயே தடையை நீக்கியதற்குக் காரணம் என்ன? ஸ்பெஷல் ரீசன்ஸ் என்ன? குறுவை நேரத்திலே தஞ்சை மாவட்டத்திலே அவ்வளவு சாப்பிட மாட்டார்கள், ஆகவே, அங்கேயே தேங்கக்கூடாது என்று தடை நீக்கப்படும். ஒவ்வொரு வருடமும் 9ஆவது மாதம், 10ஆவது மாதத்திலே தடையை எடுப்பவர்கள், இந்த ஆண்டு 6ஆவது மாதத்திலே ஏன் தடை நீக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் கூறுவார்களா?

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நான் முதலிலேயே விளக்கத்தைக் கூறிவிட்டுத்தான் விவரத்தைத் தந்தேன். மற்ற மாவட்டங்களில் விலை ஏறிவிட்டது. அதைச்