கலைஞரின் சட்டமன்ற உரைகள்
267
சமநிலைப்படுத்துவதற்காக, இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட அரிசி மற்ற மாவட்டங்களுக்கு செல்லுமானால் வேகமாக ஏறிவிட்ட விலை குறையக் கூடும் என்பதற்காகத்தான் அந்தத் தடை எடுக்கப்பட்டது.
திரு. கே.டி.கே. தங்கமணி : 3, 4 வருஷங்களாகத் தடை எடுக்கப்பட்டதைப் பற்றியெல்லாம் சொன்னார்கள். அப்பொழுது தடை எடுக்கப்பட்ட நேரத்திலே விலை எந்த அளவு கூடியது? கூடியதா இல்லையா? இந்த அளவு, இந்த விலை கூடியதே இதற்கு என்ன காரணம்?
திரு. ஆலடி அருணா : தலைவரவர்களே, பெரியவர் மணலி அவர்கள், விவசாயிகளுக்கு ஓரளவு விலை கிடைக்க வில்லை, அவர்களுக்கு விலை கிடைக்க வேண்டுமென்பதற்காக நானே முதலமைச்சர் அவர்களிடம் தனியாக நேரில் சொன்னேன். அதன் பேரில்தான் அந்த உத்தரவு போடப்பட்டது என்று முன்பு சொன்னார். இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள் வேறு ஒரு கருத்தைச் சொன்னார். இதில் எது உண்மை என்று எங்களுக்குத் தெரிய வேண்டும்.
திரு. எஸ். வடிவேல் : தஞ்சை மாவட்டத்திலே, மணலி போன்றவர்கள் சொன்னதன் காரணமாக, தடை நீக்கப்பட்டது என்று சொன்னார்கள். ஆனால், உண்மையிலேயே விவசாயிகளுக்கோ, விவசாயக் குத்தகைதாரர்களுக்கோ, சிறுநிலக்காரர்களுக்கோ, இந்த நெல் விலையிலே உயர்வு இல்லை. அறுவடை முடிந்து வருகிறார்கள். கையிலே நெல் போன பிறகு, இந்த விவசாயிகளை, இந்த ஏழைகளை, இது பாதிக்குமா, பாதிக்காதா என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : விவசாயிகள் கூறினார்கள். அதைப்போலவே மற்ற மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள், வாங்கிப் புசிக்கின்ற மக்கள் கூறினார்கள். பத்திரிகையிலே எழுதினார்கள், மற்ற மாவட்டங்களில் விலை ஏறிவிட்டது என்கின்ற புள்ளிவிவரங்கள் தினந்தோறும் வந்தன. அதை சமநிலைப்படுத்துவதற்கு அடிப்படையாக தடையை எடுக்கிறோம் என்று சொல்லி, நிருபர்களிடத்திலும் எடுத்துச்