268
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
சொல்லி, அந்த அறிக்கை வெளியிடப்பட்டு, தஞ்சாவூரிலிருந்த தடை நீக்கப்பட்டது. ஆனால், அரசினுடைய நல்லெண்ணத்தைப் புரிந்துகொள்ளாமல் சிலபேர் இடையிலே தவறு செய்ய முற்பட்டார்கள்.
-
நாம் தடையை எடுத்தவுடன் அரிசி விலை ஏறியதா, குறைந்ததா என்பதைப் பார்க்கவேண்டும். அதை கே.டி.கே. தங்கமணி அவர்கள் கேட்டார்கள். விலை குறைந்தது என்பதைப் பற்றி 13-6-1974 தினமணி பத்திரிகையிலும், 14-6-1974 இந்து பத்திரிகையிலும் செய்திகளைப் போட்டிருக்கிறார்கள். 'தமிழ் நாட்டில் அரிசி விலை குறைகிறது' என்று தலைப்பிட்டு தினமணி பத்திரிகையில் வந்துள்ள செய்தி : திருச்சி, ஜூன் 12 கட்டாய லெவி முறையும், தஞ்சை மாவட்டத்திலிருந்து அரிசி நடமாட்டத் துக்குள்ள கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்பட்டதையடுத்து தமிழ் நாட்டில் அரிசி விலை குறைய ஆரம்பித்துள்ளது. திருச்சியில் அரிசி, நெல் மூட்டைகள் விலை ரூ. 8 முதல் ரூ. 10 வரை குறைந்துள்ளதாக திருச்சி வர்த்தக சபைத் தலைவர் கே. மாயாண்டி தெரிவித்துள்ளார். சர்க்கார் இதை முன்பே செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார். அவர் கொடுத்துள்ள அறிக்கையில் அரிசி சில்லறை விலையும் கிலோவுக்கு 15 பைசா குறைந்துள்ளதாக
கூறியிருக்கிறார்.
அது மாத்திரமல்ல, சென்னையிலும் விலை குறைந்தி ருக்கிறது என்கின்ற விவரங்கள் தினமணியிலே வெளியாகியிருக் கின்றன. கோவையிலும் விலை குறைந்திருக் கின்றது என்கின்ற செய்தி வந்திருக்கிறது. இதுபற்றி, தினமணியில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. 'அண்மையில் அரிசி விலை தமிழ் நாடெங்கும் கணிசமாக உயர்ந்துள்ளது. அரிசி, நெல் மீதான லெவியும் போக்குவரத்துக் கட்டுப்பாடுந்தான் இதற்குக் காரணம் என்று வர்த்தகத் துறையினர் கூறினர். இதற்கு மதிப்புக் கொடுத்து, தமிழ்நாடு முழுதும் அரிசி, நெல் லெவியை அரசு ரத்து செய்துள்ளது. தஞ்சாவூர் ஜில்லாவிலிருந்து வெளியே அரிசி, நெல் கொண்டு போவதற்கு இருந்த கட்டுப்பாடுகளையும் அரசு விலக்கி விட்டது. எல்லைப்புறங்களில் மட்டுமே கள்ளக் கடத்தலைத் தவிர்க்கக் கட்டுப்பாடுகள் இருந்துவரும். மற்றப்படி