கலைஞரின் சட்டமன்ற உரைகள்
269
தாராளப் போக்குவரத்து இருக்குமாகையால், மாநிலமெங்கும் விலை வீக்கம் ஓரளவு வடிந்து ஏறக்குறைய ஒரே சீரான விலை அமுலாவது சாத்தியமாகலாம்' என்று தினமணி போன்ற பத்திரிகைகள் எல்லாம் தலையங்கம் எழுதினார்கள். ஆனால், நாம் நினைத்ததற்கு மாறாக, கொள்ளை இலாபம் அடிக்க வேண்டுமென்று எண்ணிய வியாபாரிகள், இந்த நேரத்திலே உணவு தானியங்கள் அதிக விலைக்குப் போனால், பெருத்த இலாபம் கிடைக்கும் என்ற பேராசைக்கு ஆளான அந்த வியாபாரிகளுடைய நோக்கத்திற்குப் பலியான விவசாயப் பெருமக்கள் அரசின் இந்த நல்ல நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் இருந்ததால், அங்கங்கு கொண்டு போகப்பட்ட உணவு தானியங்கள் பதுக்கப்பட்டன. சில இடங்களில், கள்ளக் கடத்தலுக்கு வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. உடனடியாக, இந்த அபாயத்தை உணர்ந்த அரசு, 13-ந் தேதியே மீண்டும் சில நிபந்தனைகளை விதித்து, கலெக்டர் அவர்களுடைய அனுமதியில்லாமல் வெளி மாவட்டங்களுக்கு அரிசியோ, நெல்லோ எடுத்துச் செல்லக் கூடாது என்ற நிபந்தனையோடு தடை விதித்தது. அத்துடன், மற்ற மாவட்டங்களிலுள்ள அந்தந்த கலெக்டர்களுடைய மேற்பார்வையிலேதான் அங்கங்கு இங்கிருந்து எடுத்துச் செல்லப்பபடுகிற நெல்லோ, அரிசியோ விநியோகிக்கப்பட வேண்டுமென்ற நிபந்தனைகளும் போடப்பட்டு, ஏற்பட இருந்த அபாயம் தடுக்கப்பட்டது.
ஆனால், இங்கே பேசுகின்ற நேரத்திலே 9 .,இலட்சம் டன் அந்த மூன்று நாளிலே வெளியிலே போய்விட்டது என்று செழியன் அவர்கள் சொன்னார்கள். ஒன்பது இலட்சம் டன் என்பது ஏதோ பேசுவதற்கு அழகாக இருக்கலாம், கேட்பதற்குப் பீதியை உருவாக்கலாம். இந்த 9 இலட்சம் டன் போய் விட்டதனாலேதான் இப்பொழுது இவ்வளவு பற்றாக்குறை ஏற்பட்டது என்று பொதுமக்கள் நம்பலாம். ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். ஒன்பது இலட்சம் டன்னை எடுத்துச் செல்ல எத்தனை லாரிகள் வேண்டுமென்று எண்ணிப் பார்க்கவேண்டும். ஒரு லாரியில் 5 டன் நெல்லோ, அரிசியோ தான் ஏற்றமுடியும் என்று கணக்கிடுகிறார்கள். நான்,