உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

271

போட்டு

திரு. கே.டி.கே. தங்கமணி அவர்கள் தமிழ்நாட்டு அரிசி துபாய் என்ற இடத்திற்கு போய்விட்டது. அங்கே தமிழ்நாடு அரிசி என்று போர்டு போட்டு விற்கிறார்கள் என்று சொன்னார்கள். அரங்கண்ணல் கூட என்னிடம் சொன்னார்கள், லாஸ் ஏஞ்சல்ஸிலே போய் பார்த்தால் மெட்றாஸ் ஊறுகாய் என்று அங்கே போர்டு போட்டிருக்கிறார்கள் என்றார். மெட்றாஸ் ஊறுகாய் என்று போர்டு போட்ட காரணத்தாலேயே சென்னையில் இருந்து யாரோ கடத்திக் கொண்டு போய் விற்கிறார்கள் என்று அர்த்தமல்ல. மெட்றாஸ் அல்லது தமிழ்நாடு என்று மக்களைக் கவர அப்படிப்பட்ட விளம்பரங்களைப் போட்டிருக்கலாம். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் நம்முடைய மாநில காவல்துறையினரும், கேரள அரசு காவல்துறையினரும் இப்படிப்பட்ட விவரங்களையெல்லாம் பற்றி சென்ற ஆண்டிலே கூடிப் பேசி முடிவு எடுத்தார்கள். அரிசி, மாவு போன்றவைகளை படகுகளிலே, கள்ளக் கடத்தல் தோணிகளிலே கடத்திச் செல்ல முடியாது. காரணம் கடலினுடைய அலைகள், அதிலே ஏற்படுகிற உப்பு காரணமாக இந்த உணவுப் பொருட்கள் கெட்டுவிடும் என்பதால் இந்தச் செய்திகள் தவறானவை என்றும் இருந்தாலும் கண்காணிக்கவேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். நான் கேரள மாநில காவல்துறையினரோடு என்று சொன்னதற்குக் காரணம், திரு. கே.டி.கே. அவர்கள் அப்படிச் சொன்னால்தான் நம்புவார் அதற்காகத்தான் சொல்கிறேன் கேரள மாநில காவல் துறையினரோடு நம்முடைய காவல்துறை அதிகாரிகளும் கூடிப் பேசி இந்த முடிவிற்கு வந்திருக்கிறார்கள்.

-

திரு. கே.டி.கே. தங்கமணி : இப்போது முதலமைச்சர் அவர்களுடைய வாதம் தமிழ்நாட்டிலிருந்து அரிசி வேறு மாநிலங்களுக்குப் போகவில்லை என்பதுதானா? போகவில்லை என்று சொல்கிறார்களா? அப்படிப் பேசுவது பேச்சுக்கு நன்றாக இருக்கும். தமிழ்நாட்டு அரிசி என்று சொல்லி அங்கே இருக்கின்ற ஜனங்களை ஏமாற்ற முடியாது. தமிழ்நாட்டு மக்களைவிட குஜராத்காரர்களும், துபாய் மக்களும்தான் அதிகமாக அங்கே இருக்கிறார்கள். வேண்டுமானால் கேரள போலீஸைக் கேளுங்கள். போகக்கூடிய லாரிகள் நேராக கோடவுனுக்குப் போகாமல் வேறு