உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

இடங்களுக்குச் சென்றிருக்கின்றன. அங்கே இருக்கக்கூடிய கள்ளக் கடத்தல்காரர்களுக்கும் இங்கே இருக்கக்கூடிய கள்ளக் கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு இருக்கலாம். நான் சொல்லியது தவறு என்று சொல்கிறார்களா? அரிசி வேறு மாநிலத்திற்குப் போகவேயில்லை என்று முதலமைச்சர் அவர்கள் சொல்கிறார்களா?

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நான் தெளிவாகக் கூறினேன். கூறினேன். இரண் மாநிலக் காவல் துறை அதிகாரிகளும் கூடிப் பேசியிருக்கிறார்கள். இருந்தாலும் கவனிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இல்லவே இல்லை என்று நான் தட்டிக்கழிக்கவில்லை, தட்டிக்கழிக்கிறேன் என்ற கற்பனையை அவர்கள் கொண்டிருக்க வேண்டாம். திரு. கே.டி.கே. அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், வாதத்திற்காகச் சொல்கிறேன் அப்படியே போயிருந்தாலும் துபாய் என்ற இடத்திற்கே போயிருந்தாலும் இதற்குப் பொறுப்பு மாநில அரசா அல்லது மத்திய அரசா என்பதைக் கவனிக்க வேண்டும். மத்திய அரசுதான் அதற்குப் பொறுப்பு என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். துபாய்க்கு அரிசி போய்விட்டது என்று பாராளுமன்றத்திலே பிரச்சினையை எழுப்பி மத்திய சர்க்கார் கவனிக்க வேண்டும். மாநில அரசுக்குப் பொறுப்பு இல்லையா என்றால் பொறுப்பு இருக்கிறது. ஆனால் எதற்கெடுத்தாலும் மாநில சர்க்கார்தான் கவனிக்கவேண்டுமென்று சொல்வதை நம்முடைய அனுபவமிக்க திரு. தங்கமணி போன்றவர்கள் வைத்துக்கொள்ளக் கூடாது.

யாசின் எங்கே போய்விட்டார் என்று திரு. தங்கமணி கேட்டார். ஏதோ தமிழ்நாடு சர்க்கார் அவரை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்ற உணர்வு தோன்றுகிற அளவில் அல்லது அவரைப் பிடிக்காமல் வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்படக்கூடிய அளவிற்கு அவரைப் போன்றவர்கள்

பேசுவது வியப்பாக இருக்கிறது. யாசினை பிடிக்க வேண்டுமென்று மத்திய சர்க்கார் அனுப்பிய முதல் பட்டியலிலே சொல்லவில்லை. அதிலே யாசினுடைய பெயரும் ரகுமானுடைய பெயரும் இல்லை. இன்ன இன்ன கள்ளக்கடத்தல்காரர்களைப் பிடிக்கவேண்டுமென்று மத்திய அரசு அனுப்பிய முதல் பட்டியலில் யாசின் பெயரும் இல்லை, ரகுமான் பெயரும் இல்லை.