உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

273

இரண்டாவது பட்டியல் வருவதற்கு முன்பு அவர்கள் போய்விட்டார்கள். அதற்கு யார் காரணம்? முதல் பட்டியலிலே இன்றைக்கு இவ்வளவு பிரசித்தி பெற்றவர்களாக இருக்கிற யாசினும் ரகுமானும் இணைக்கப்படாததற்கு காரணம் என்ன என்று ஆராயவேண்டுமேயல்லாமல் ஏதோ யாசின் பல்லவன் போக்குவரத்துக் கழக பஸ்ஸிலே ஏறி வெளிநாட்டிற்குப் போய்விட்டார் என்பது போல மாநில சர்க்கார் மீது குற்றஞ் சாட்டுவது சரியல்ல. அவர் எந்த விமானத்திலே போனார்? யார் அவருக்கு பாஸ்போர்ட் கொடுத்தார்கள்? பாஸ்போர்ட் கொடுக்கிற அதிகாரம் மாநில சர்க்காருக்கு இருக்கிறதா? மத்திய சர்க்காருக்கு இருக்கிறது. யார் யாசினுக்குத் துணைபோனார்கள் என்பதை எல்லாம் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு மத்திய சர்க்காருக்கு இருக்கிறதே தவிர, மாநில சர்க்காருக்கு இல்லை. ஏன் முதல் பட்டியலிலே சேர்க்கவில்லை என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு மத்திய சர்க்காருக்கு இருக்கிறது. மாநில சர்க்காருக்கு இல்லையென்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமதி த.ந. அனந்தநாயகி : அரிசியைத் துபாய்க்கு அனுப்பியதற்குப் பொறுப்பு மத்திய சர்க்கார்தான், மாநில சர்க்கார் இல்லை என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். மத்திய அரசாங்கத்திற்கு துபாய் என்ற இடத்திற்குக் கொண்டு போவது பற்றி பொறுப்பு இருக்கிறது. ஆனால் அரிசியை கேரள மாநிலத்து எல்லை வரை கொண்டுபோய் கொடுத்ததைக் கவனிக்க வேண்டிய, கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசினுடையதுதானே, எல்லை வரை கொண்டு போனதற்கு முழுக்க முழுக்க மாநில சர்க்கார்தான் பொறுப்பு. எல்லைவரை கடத்திக் கொண்டுபோய் இருக்கிறார்கள் என்றால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு.

திரு. கே.டி.கே. தங்கமணி : யாசின்பற்றிக் கேட்டார்கள். பல கள்ளக் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்ட சமயத்தில் அவர் தமிழ்நாட்டிலே இருக்கிறார். அவர் கள்ளக்கடத்தல்காரர் என்று தமிழ்நாடு அரசுக்குத் தெரியாதா?

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : யாசின் மாத்திரமல்ல, இன்னும் சில கறுப்புப்பணக்காரர்கள் தமிழ்நாட்டில்

10-க.ச.உ.(அ.தீ.) பா-2