274
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
இருப்பதும் தமிழக அரசுக்குத் தெரியும். ஆனால் அவர்களைப் பிடிக்கக்கூடிய அதிகாரம் எங்களுக்கு இல்லையே.
திரு. கே.டி.கே. தங்கமணி : கள்ளக் கடத்தல்காரர்களை நீங்களாகவே பிடித்தால் அந்த நல்ல பெயரும் இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : பிடித்திருக்கலாம் அந்த அதிகாரங்கள் நமக்கும் வேண்டுமென்றுதான் நாம் இன்றைக்கு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்கள் என்ன என்ன பெயர்களை பட்டியலில் அனுப்பி வைக்கிறார்களோ அவர்களைத்தான் பிடிக்க வேண்டுமென்று இருக்கிறது. நாமாக கள்ளக் கடத்தல்காரர்களைப் பிடிக்கலாம் என்று சொன்னால் திரு. கே.டி.கே. அவர்கள் அப்படி ஒரு தீர்மானம் கொண்டுவந்தால் நிறைவேற்றித் தர ஆளுங்கட்சியில் இருக்கிற அத்தனை பேரும் தயாராக இருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அதனுடைய விளைவாக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் போதும் அவர்கள் எங்களோடு நிற்க வேண்டும். இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து அதை நிறைவேற்றித் தந்து அமல்படுத்துகிறபோதும் அவர்கள் எங்களோடு இருக்கத் தயார் என்றால் நாங்கள் அதை நிறைவேற்றித் தருவதில் தயக்கம் இல்லை. அவர்கள் அனுப்பிய முதல் பட்டியலில் சொல்லப்பட்ட பெயர்களிலே யாருடைய பெயரும் விடப்பட்டது கிடையாது. குறிப்பிட்ட யாசின் கூட வெளிநாட்டில் இருக்கிறார். இங்கு இல்லை என்று தெரிந்ததற்குப் பிறகு அவருடைய சொத்துக்களையெல்லாம் காலக்கெடு கொடுத்து, இவ்வளவு நாட்களுக்குள் வராவிட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உயர்நீதிமன்றத்தின் சார்பாக இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். (குறுக்கீடு) நான் சொல்லுகின்ற வார்த்தைகளை விட்டுவிட்டுப் பேசினால் என்ன அர்த்தம்?
திரு. கே.டி.கே. தங்கமணி : ஆரம்பிக்கிறபொழுதே சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு என்று சொல்லி பிறகு தான் நீதிமன்றத்திற்கு வந்தார்களேயொழிய இந்தச் சர்க்கார், கள்ளக் கடத்தல்காரர்கள் என்று தெரிந்தவுடனேயே, உடனடியாக