கலைஞரின் சட்டமன்ற உரைகள்
275
பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தது மாதிரியாகச் சொல்கிறார்கள். அதிலே வேறு சில தவறுகள் நடந்திருக்கின்றன. கூலி மஸ்தான் கார் சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்டு யார் அதை உபயோகப்படுத்தினார்கள்?
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, நான் அவர்களைப் போல் சட்டமெல்லாம் படிக்க வில்லை. திரு. தங்கமணி அவர்கள் சட்டத்திலே மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள். வெளிநாட்டிற்குச் சென்று சட்டம் படித்தவர்கள். சர்க்கார் உத்தரவு போட்டுத்தான், நீதிமன்றம் அங்கீகரித்து சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அங்கீகாரம் செய்திருக்கிறது.
கள்ளக் கடத்தல்காரர்களை மட்டுமல்லாமல், தமிழகத்தைப் பொறுத்தவரையில் இன்று அல்ல, 1973ஆம் ஆண்டிலிருந்து, மத்திய சர்க்காருடைய உத்தரவு கள்ளக் கடத்தல் மன்னர்களைப் பிடியுங்கள் என்று வருவதற்கு முன்பிருந்தே, தமிழகத்திலே உள்ள அரிசிக் கடத்தல் அரசர்களையெல்லாம் பிடிக்கிற அந்தப் பொறுப்பை நம்முடைய மாநில அரசு ஏற்று, 1973ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மிசா உத்தரவைப் பயன்படுத்தி 48 பேர்களை நாம் பிடித்திருக்கிறோம், இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி உணவு தானியம் பதுக்கல்காரர்கள், கடத்தல்காரர்கள், உணவு தானியங்களிலே இப்படிப்பட்ட கோர விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிற கொடுமைக்காரர்கள் 522 பேரை கைது செய்து அவர்கள் மேல் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. 48 பேர் மிசாவிலே பிடிக்கப்பட்டவர்கள், 522 பேர் இந்தியப் பாதுகாப்பு சட்டப்படி பிடிக்கப்பட்டவர்கள், இவர்களிடமிருந்து மொத்த மதிப்பு 2 கோடியே 28 இலட்சம் ரூபாய்க்கான உணவு தானியங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
உண்மை இப்படியிருக்க, பதுக்கல்காரர்கள், கடத்தல் காரர்கள், பணக்காரர்கள், இப்படிப்பட்டவர்கள், செல்வச் சீமான்கள், இவர்களெல்லாம் இந்த அரசுக்குத் துணையாக இருக்கிறார்கள் என்று, நம்முடைய நண்பர் திரு. பெ. சீனிவாசன் அவர்கள் ரொம்ப வேதனையோடு சொன்னார்கள். அடிக்கடி நம்முடைய திரு. பொன்னப்ப நாடார் அவர்களும் திரு. கே.டி.கே. தங்கமணி அவர்களும் வடபாதி மங்கலம் தியாகராச முதலியாரைப் பற்றிப் பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய