உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

285

கொடுக்கப்பட்டு வந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ஓரளவு நெல்லை சிவில் சப்ளை கார்ப்பரேஷனுக்கு விற்ற தஞ்சை விவசாயிகளையும் லெவி முறைக்குக் கொடுத்து உதவிய மற்ற மாவட்டங்களிலுள்ள விவசாயிகளையும் நான் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

இதுவரையில் குறுவையில் நமது மாநிலத்தில் 1,43,000 டன்கள் கொள்முதல் ஆகியுள்ளது. இவற்றில் தஞ்சையில் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் - 1,07,500 டன்கள். தஞ்சையில் மட்டும் ஃபுட் கார்ப்பரேஷன் 8,000 டன்கள். மற்ற மாவட்டங்களில் 27,500 டன்கள்.

16-12-1974 முதல் மாநிலம் முழுவதற்கும் மத்திய அரசு நிர்ணயித்த லெவி விலையை நமது அரசு அமல்படுத்தும். இந்த விலையோடு போக்குவரத்து போன்ற இடைநிகழ் செலவுகளுக்கு உற்பத்தியாளர்களுக்கு ஒரு சிறு தொகை சேர்த்துக் கொடுக்கப்படும்.

இந்த மாதம் 12-ந் தேதி நான் சட்டமன்றத்தில் உணவு தானியம் உபரியாக உள்ள பகுதிகளில் மொத்த வாணிபம் செய்ய தனிப்பட்ட வியாபாரிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் இந்தப் பகுதிகளில் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட லெவியை வாங்கிய பின்பு, உபரியாக இருக்கும் நெல் கூட்டுறவு நிறுவனங்கள்மூலம் வாங்கப்படும் என்றும், மாநிலம் முழுமைக்கும் நெல், அரிசி ஆகியவற்றுக்கு அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்படும் என்றும் கூறினேன்.

உற்பத்தியில் ஒரு பகுதியை மத்திய அரசு நிர்ணயித்த விலையில் லெவிமூலம் கொடுத்து விடுவதால் எங்கெங்கே லெவி அமலில் உள்ளதோ அங்கெல்லாம் கூட்டுறவுச் சங்கங்கள்மூலம் வெளிச் சந்தையில் நெல் வாங்கப்படும்.

இந்த அதிகபட்ச விலைகள் பின்வருமாறு :-

குவிண்டால் ஒன்றுக்கு இனிமேல்

மோட்டா ரகம்

நடுத்தரம்

ரூ.

95

88

100 00