உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

சந்தித்து இந்த நிலைமைகளைச் சுட்டிக்காட்டி இருக்கிறேன். இதற்கிடையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து கோடி ரூபாய் வேண்டும் என்று பிரதமரைக் கேட்டார்கள். அது எப்படிப் போதும் என்று நண்பர் முத்துச்சாமி குறைபட்டுக் கொண்டார். இந்தத் தடவை அதையாவது கேட்டார்களே என்று சந்தோஷப்பட வேண்டும். 69-ல் தமிழகத்தில் வறட்சி ஏற்பட்ட போது பிரதமர் தமிழகத்தை வந்து பார்க்க வேண்டும் என்றபோது இங்கே வறட்சி இல்லை, பசுமையாக இருக்கிறது என்று சொன்னவர்கள் இந்தத் தடவை ஐந்து கோடி ரூபாய் முந்திக் கொண்டு கேட்டதற்காகப் பரவாயில்லை என்று நன்றி தெரிவிக்க வேண்டுமே அல்லாமல் அதற்காக நாம் குறைபட்டுக்கொள்ளக் கூடாது என்பதையும்.

திரு. கே.டி.கே. தங்கமணி : நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லாம் போய்க் கேட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த மன்றத்தில் உங்கள் கட்சியின் சார்பாக ஏன் கேட்டார்கள் என்றுகூடச் சொன்னார்கள்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : ஏன் கேட்டார்கள் என்று யாரும் கேட்கவில்லை. குறைவாகக் கேட்டார்கள் என்று தான் குறைபட்டுக் கொண்டார்கள்.

திரு. பெ. சீனிவாசன் : லோன் கொடுப்பதைவிட வாட்டர் போர்டு மூலமாகப் புஞ்சைப் பகுதிகளில் கிணறுகளை ஆழப்படுத்த வேண்டும். இதை வாட்டர் போர்டு பொறுப்புக்கே ஒப்படைத்தால் நல்லதாக இருக்கும்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நாங்களே : இங்கு இருந்து இந்தக் காரியத்தைச் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், செய்கிறோம்.

திரு. எஸ். வடிவேல் : மழை இல்லாத காரணத்தாலே தஞ்சாவூர் ஜில்லாவில் தாளடி சரியாக விளைச்சல் இருக்காத நிலை இருக்கிறது. ஆகையால் குத்தகை விவசாயிகள் குத்தகை அளக்க முடியாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படி குத்தகை அளக்கவில்லை என்றால் கோர்ட்டுக்குச் சென்று நிலத்தை விட்டு வெளியேற்றி விடுவார்கள். அதற்கும் உத்தரவாதம் வேண்டும்.