உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

293

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : உங்கள் நம்பிக்கைக்கு உரிய நான் இவைகளை எல்லாம் ஆராய்ந்து செய்கிறேன்.

தலைவர் அவர்களே, இப்போது தமிழகத்தைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்ட ஏழு லட்சம் பம்பு செட்டுகள் இருக்கின்றன. 2 லட்சத்து 89 ஆயிரம் பம்பு செட்டுகள் இருந்ததை இன்றைக்கு ஐந்தாறு ஆண்டுக் காலத்தில் 7 லட்சம் பம்பு செட்டுகள் என்ற அளவுக்கு நாம் உயர்த்தி இருக்கிறோம். மேலும் வேண்டும் என்ற விண்ணப்பங்கள் 1 லட்சத்து 50 ஆயிரம் பம்பு செட்டுகளுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. 74-75-ல் 32 ஆயிரம் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்புத் தர திட்டம் இடப்பட்டு அதில் இதுவரை 16 ஆயிரத்திற்குக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 75 மார்ச் மாதத்திற்குள் மீதமுள்ள 16 ஆயிரம் பம்பு செட்டுகளுக்கான மின் இணைப்புத் தரவேண்டும் என மின் வாரியத்திற்கு எடுத்துச் சொல்லப்பட்டு வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இவை தவிர நான் ஆரம்பத்தில் அறிவித்தபடி 60 ஆயிரம் பம்பு செட்டுகள் அமைப்பதற்கான திட்டத்தை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இப்போது தமிழ்நாட்டில் டீசல் பம்புகள் 91 ஆயிரம் என்ற அளவில் இருக்கின்றன. மேலும் உணவு உற்பத்தி கருதி டீசல் என்ஜின் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று கூறி இருக்கிறேன். இது ஆறு மாதம் ஆகுமா என்று கேட்டார்கள். ஆணை பிறப்பித்து ஆறு நாள் ஆகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். டீசல் பம்பு செட்டு வாங்குவதற்கும் நில வள வங்கியில் கடன் வழங்குவதற்கு ஆறு மாதம் ஆகுமோ என்று யாரும் சந்தேகிக்கத் தேவை இல்லை என்று எடுத்துச் சொல்லி இந்தச் சூழ்நிலையில் எல்லா எதிர்க்கட்சிகளும், தோழமைக் கட்சிகளும், பொதுமக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் இந்த அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இந்த அறிவிப்புகளுக்குப் பிறகாவது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தையும் கண்டனத் தீர்மானத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டு இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அமர்கிறேன். வணக்கம்.