294
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
உரை : 70
கண்டனத் தீர்மானம்
நாள்: 30.10.1975
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே! நம்முடைய அருமை நண்பர் மாரிமுத்து அவர்களால் கொண்டுவரப்பட்டுக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர் திரு.கே.டி.கே.தங்கமணி அவர்களால் வழிமொழியப்பெற்று, இந்த அவையினுடைய விவாதத்திற்கு உட்பட்ட கண்டனத் தீர்மானம் குறித்து, இந்த அவையில் 20க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்
தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய ஆளுங் காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் மாரிமுத்து மெத்தப் பெருந்தன்மை யோடு, கூறிய கருத்துக்கள் நம்மாலே ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளா அல்லவா என்ற நிலைமை இருந்தபோதிலும், தன்னுடைய கருத்துக்களை நெகிழ்வோடு கூறினார்கள். வழிமொழிந்து பேசிய மாண்புமிகு உறுப்பினர் கே.டி.கே. தங்கமணி அவர்கள், மிக்க நிதானமாக இந்தக் கண்டனத் தீர்மானத்தில் தன்னுடைய கருத்துக்களை எடுத்து வைத்து, மாநில அரசின் மீது அவர் காட்ட வேண்டிய குற்றங்கள் என்றாலும், அல்லது மத்திய அரசின் போக்கில் அவருக்குப் பிடிக்காத அம்சங்கள் இருந்தாலும் அவைகளையும் மிக்க நிதானமாக இந்த மன்றத்திலே இந்தத் தீர்மானத்தை வழிமொழிந்ததன் மூலம் எடுத்து விளக்கியிருக்கிறார்கள்.
கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென்று அதற் கான மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டு, பொதுவாகத் தீர்மானம் தருவதற்கு, அதிலும் குறிப்பாக இதுபோன்ற தீர்மானம் வருவ தற்கு எத்தனை உறுப்பினர்கள் எழுந்து நின்றார்கள் என்கிற எண்ணிக்கையின் அடிப்படைக்குத் தாங்கள் உதவியதாகக் கூறி,