உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

ஆக, நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் 25,000 கோடி ரூபாய் இருக்க, ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 53,000 கோடியாக, இரட்டிப்பாக ஆக்கப்பட்டுப் பிரம்மாண்டமான திட்டம் என்று பெரும் தலைப்புகளிலே வெளியிடப்பட்ட பிறகு, அந்தத் திட்டத்திற்கு நாம் ஏறத்தாழ 400-லிருந்து 500 கோடி ரூபாய் வரை மத்திய நிதி உதவியாக (சென்ட்ரல் அசிஸ்டன்ஸ் கடனாகவும், மானியமாகவும் பெற வேண்டிய, தொகைக்கு மாறாக 200 கோடி ரூபாய்தான் பெற இருக் கிறோம். ஆக ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டமும் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தைப்போலதான் இருக்கிறது. அவர்கள் அறிவித்த திட்டத்தின் கதி என்ன? அது என்னவாயிற்று? அந்தக் காட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே திரை விழுகிறது

நடைபெறவில்லை. அப்படியானால் ஐந்தாவது ஐந்தாண்டுக் காலத்திலே 'ரோட் சீன்' வருவதைப்போல திரை விழுகிறது. 20 அம்சத் திட்டம் என்று அறிவிக்கப்படுகிறது. ஆக, ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காட்சி மறைகிறது. 20 அம்சத் திட்டம் என்கின்ற புதிய காட்சி வருகிறது. ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டப் பலன்களை, ஒவ்வொரு மாநிலமும் மிகு நிதி பெற்று, அதாவது மிகுந்த நிதியைப் பெற்றுத் தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றலாம், மாநில வளர்ச்சியைப் பெருக்கலாம் என்று எண்ணியிருந்த நேரத்தில், அது என்னவாயிற்று என்ற கேள்விக்கு, எந்தவிதமான பதிலும் இல்லாமல், இரண்டு ஆண்டுக் காலத்திற்கு முன்பு விவாதிக்கப்பட்ட ஒரு பெரிய திட்டத்தை எங்கோ ஒரு உலையில் போட்டுவிட்டு, இப்போது 20 அம்சத் திட்டம் என்று ஒன்றை அறிவித்திருக்கிறார்கள்.

இந்த 20 அம்சத் திட்டம் கூட 1967-ஆம் ஆண்டு காங் கிரஸ் கமிட்டி மே மாதத்திலே கூடி, 10 அம்சத் திட்டம் என்று ஒன்றை அறிவித்தார்கள். நம்முடைய நண்பர் சுப்பு அவர்கள் நேற்றைய தினம் பேசும்போது குறிப்பிட்டார்கள். அரசியல் சட்டத்திலே முகப்புக் குறிக்கோள்களிலே எவை எவை இருக் கின்றனவோ அவைகள்தான் இப்பொழுது 20 அம்சமாக உருவெடுத்திருக்கின்றன என்று குறிப்பிட்டார்கள்.

அதற்கிடையே 1967-இல் 10 அம்சத் திட்டம் என்று ஒரு திட்டத்தைப் பிரகடனப்படுத்தினார்கள். அவை என்னென்ன?