கலைஞரின் சட்டமன்ற உரைகள்
பாங்குகளைத் தேசீய மயமாக்குதல் இன்ஷூரன்ஸை தேசீய மயமாக்குதல்
மன்னர்மானியத்தை ஒழித்தல்
கிராமத்திட்டம், நிலச்சீர்திருத்தம்
நகர்ப்புறச் சொத்துக்கு உச்சவரம்பு
299
-ஒன்று
-இரண்டு
-
மூன்று
-நான்கு
-ஐந்து
மக்களின் அடிப்படைத் தேவைகளைப்
பூர்த்தி செய்தல்
-ஆறு
ஏகபோக உரிமைக்குக் கட்டுப்பாடு செய்தல்
-ஏழு
-எட்டு
கூட்டுறவுத்துறையை விரிவுபடுத்துதல்
உணவு வாணிபத்தை அரசே மேற்கொள்ளுதல் -ஒன்பது
ஏற்றுமதி, இறக்குமதியில் பொருள்வாரியாக
முன்னேற்றம் காணுதல்
-பத்து
என்று இந்த பத்து அம்சத் திட்டம் அறிவிக்கப்பட்ட இவை களில் எவை எவை நிறைவேற்றப்பட்டன? நிறைவேற்றத் தொடங்கி எவை எவை இடையிலே முறிந்து போயின என்பதை மறந்துவிடக் கூடாது.
பாங்குகள் தேசியமயமாக்கப்படும் என்று அறிவித்தார்கள். 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அதற்குமேல் அடி யெடுத்து வைக்கவில்லை; அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்ஷூரன்ஸ் தேசியமயமாக்கப்பட்டது மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டது.
கிராமத் திட்டம், நிலச் சீர்திருத்தம்- இது இன்றைக்கு அறிவிக்கப்பட்டிருக்கிற 20 அம்சத் திட்டத்தில் ஒன்று.
நகர்ப்புறச் சொத்துக்கு உச்சவரம்பு- இதுவும் இன்றைக்கு அறிவிக்கப்பட்டிருக்கிற 20 அம்சத் திட்டத்தில் ஒன்று.
ஆறாவது திட்டமாக அன்றைக்குச் சொன்னது மக்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்தல். இது பொதுவானது.