300
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
மக்கள் அடிப்படைத் தேவைகள் என்னென்ன என்று எதுவும் குறிப்பிட்டுத் தெளிவாகச் சொல்லாமல் பொதுவாகச் சொல்லப்பட்ட ஒன்று.
ஏழாவதாகச் சொல்லப்பட்டது ஏகபோக உரிமைக்கு கட்டுப்பாடு செய்தல். அது என்ன காரணத்தாலோ இந்த 20 அம்சத் திட்டத்தில் இடம்பெறவில்லை. 10 அம்சத் திட்டத்தில் இடம்பெற்ற அந்த பரபரப்பான ஏழாவது அம்சம், இப்போது வெளியிடப்பட்ட 20 அம்சத்தில் இல்லை. அதாவது ஏகபோக உரிமைக்குக் கட்டுப்பாடு செய்தல் என்ற அந்த அம்சம் இது.
கூட்டுறவுத் துறையை விரிவுபடுத்துதல் என்பது 1967லேயே அறிவிக்கப்பட்டபோதும் சரி, அதற்கு முன்பும் சரி நம்முடைய தமிழ்நாட்டிலே கூட்டுறவுத் துறை விரிவு படுத்தப்பட்டு மேலும், மேலும் அது இன்றைக்கு விரிவு படுத்தப்பட்டிருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், இப்போது அவர்கள் இந்த 20 அம்சத் திட்டத்தில் கூட்டுறவுத் துறையை விட்டுவிட்டு அதற்குப் பதிலாக ரூரல் பாங்க் என்கிற ஒரு புதிய அம்சத்தைச் சேர்த்திருக்கிறார்கள். பத்து அம்சத் திட்டத்தில் உணவு வாணிபத்தை அரசு மேற்கொள்வது என்பது ஒன்பதாவது அம்சம் ஆகும். இது 1967-மே மாதத்தில் வெளியிடப்பட்ட ஒன்பதாவது அம்சம். அதன்படி கோதுமை வியாபாரத்தை அரசு மேற்கொண்டது. அரசு மேற்கொண்ட கொஞ்ச நாளைக்கெல்லாம் அது சரிப்பட்டு வரவில்லை என்பதால் அந்த அம்சத்தைக் கைவிட்டு விட்டது. உணவு வாணிபத்தை அரசு ஏற்று நடத்தவேண்டுமென்பதற்கு முதல் கட்டமாகக் கோதுமை வியாபாரத்தை நடத்தத் தொடங்கி அவர்களே கைவிட்டு விட்டார்கள். பிறகு ஏற்றுமதி இறக்குமதி யில் பொருள்வாரி முன்னேற்றம் என்பதாகும். அதுவும் முழுமையாகச் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்தப் பத்து அம்சத் திட்டத்திற்குப் பிறகு, இன்று இருபது அம்சத் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருபது அம்சத் திட்டத்தை நாங்கள் ஏற்று நடத்தவில்லை அல்லது எதிர்க்கிறோம் என்றெல்லாம் தவறான குற்றச்சாட்டு சொல்லப்படுகிற நேரத்தில் பத்து அம்சத் திட்டத்திற்குத்