கலைஞரின் சட்டமன்ற உரைகள்
317
அவர்களின் விவசாயப் பொருட்களைக் காட்டி கிணறுகளை, நிலத்தைக் காட்டிப் பெறுவது மட்டுமல்லாமல் அவர்களுடைய திடீர்த் தேவைகளுக்குக் கடன் தருகின்ற வங்கிகள், கூட்டுறவு இயக்கங்கள் ஆகிய இப்படிப்பட்ட வசதிகளைப் பெருக்கிய பிறகுதான் அதைப் பற்றி நாம் யோசிக்க முடியுமே அல்லாமல் வேறு விதத்தில் இயலாது. எல்லாக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டுமென்று பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்களே சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுடைய சுமை ஒழிக்கப்பட வேண்டுமென்று குறிப்பிட்ட அதற்கேற்ற நிவாரணம் அளிக்க வேண்டுமென்றுதான் கூறியிருக் கிறார்கள். அதையும் நாம் படிப்படியாக எடுத்து ஏற்பாடுகளையெல்லாம் தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டு காலமாகவே செய்து வருகிறோம். ஆகவே, இதை முன்பே செய்தோம் என்ற குற்றத்தைத் தவிர அறவே செய்யவில்லை அல்லது செய்ய மறுக்கிறோம் என்ற குற்றச்சாட்டை யாரும் நம்மீது சாட்டிவிட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்சம்,
'உழவுத்
5ஆவது அம்சம், தொழிலாளர்களுக்குத் தற்போதுள்ள குறைந்த ஊதிய விகிதச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். குறைந்த அளவு ஊதியம் தரப்படும் இடங் களில் எல்லாம் இந்த ஊதியத்தை உயர்த்துவதற்கான நட வடிக்கை எடுக்க வேண்டும்" என்பது. இது பிரதமர் அறிவித்த 5ஆவது அம்சமாக இருக்கிறது. 1969ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள உழவுத் தொழிலாளர்கள் சம்பந்தமாக திரு.கார்த்திகேயன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்கள் இந்தக் குறைந்தபட்ச கூலி நிர்ணயம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று சொல்லி, அதை நடைமுறைப் படுத்தினோம். தஞ்சை மாவட்டத்தில் இருக்கிற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாய தொழிற்சங்கத்தை நடத்துபவர்கள், அரசின் சார்பிலே, ஆக இப்படி முத்தரப்பு மாநாட்டினைக் கூட்டி ஒரு சுமுகமான முடிவினை எடுத்திருக் கிறோம். இப்போது மீண்டும் இந்த அவசரச் சட்டத்திற்குப் பிறகு, அம்மையார் அறிவித்துள்ள 20 அம்சத் திட்டத்திற்குப் பிறகு, மீண்டும் ஒரு குழுவை நாம் இன்றைக்கு அமைத்து, நண்பர் சீனிவாசன் அவர்கள் தலைமையில் அந்தக் குழு