உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

தன்னுடைய ஆய்வை நடத்தி வருகிறது. அது பல்வேறு மாவட்டங்களிலே அந்த ஆய்வை நடத்தும்.

இதற்கிடையில் ஆண், பெண் ஆகிய இரு சாராரின் சம்பளம், நாட்கூலி, சமமாக இருக்கவேண்டுமென்ற ஒரு அறிவிப்பையும் மத்திய அரசின் சார்பிலே செய்திருக்கிறார்கள். அதையும் அடிப்படையாக வைத்து, வேலை செய்பவர்கள் ஆணா, பெண்ணா என்பதுகூட அல்லாமல், இந்த வேலைக்கு இந்தக் கூலி, அதை ஆண் செய்தாலும் சரி, பெண் செய்தாலும் சரி என்று நிர்ணயிக்கிற அளவிற்கு, அந்தக் குழு தன் ஆய்வை நடத்தி விரைவில் முடிவைத் தரும். அது அரசின் சார்பிலே பரிசீலிக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

(

6ஆவது அம்சம், "உழவுத் தொழிலையும், தொழில் உற்பத்தியையும் பெருக்க நீரும், மின்சாரமும் இன்றியமை யாதன." இது நமக்கெல்லாம் தெரியாத பெரிய விஷயம். மின்சாரமும் நீரும் இன்றியமையாதன; 'குறைந்தது 50 இலட்சம் ஹெக்டேர் நிலத்தையேனும் விரைவில் சாகுபடிக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்." இது பிரதமருடைய ஆறாவது அறிவிப்பு. 50 இலட்சம் ஹெக்டேர் என்றால் ஒன்றேகால் கோடி ஏக்கர்கள். இந்தியாவில் ஒன்றேகால் கோடி ஏக்கர்கள் புதிய பாசன வசதிகளைப் பெறுவதற்கு தலைமையமைச்சர் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் நடவடிக்கை எடுக்க முனைந்திருப்பது பாராட்டக்கூடிய அம்சம். ஏனென்றால் இந்தியா வேளாண்மைத் தொழிலேயே பெரிதும் நம்பியிருக்கின்ற ஒரு பெரும் பூபாகம். இப்படிப்பட்ட இடத்தில் மற்றத் தொழில்களுக்கு மேலாக வேளாண்மைத் தொழிலுக்கு முதலிடம் தர வேண்டும். அதை 28 ஆண்டுக்கால சுதந்திரத்திற்குப் பிறகாவது உணர்ந்து பாசன வசதிகளைப் பெருக்க வேண்டுமென்ற ஒரு நல்ல முடிவை 20 அம்சத் திட்டத்தின் மூலமாக அறிவித்த இந்திராகாந்தி அம்மையார் அவர்களை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒரு விவரத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். 1947ஆம் ஆண்டு வரையில் பாண்டியர்கள், சோழர்கள்,