கலைஞரின் சட்டமன்ற உரைகள்
319
சேரர்கள், பல்லவர்கள் ஆகிய இப்படிப்பட்ட மன்னர்கள் ஆண்டு, வெள்ளைக்காரர்கள் ஆண்டு முடிந்த 1947ஆம் ஆண்டு வரையில், தமிழ்நாட்டில் பாசன வசதி பெற்ற நிலம் சுமார் 44 இலட்சம் ஏக்கராக்கள். அந்தப் பழம்பெரும் மன்னர் களுக்குப் பிறகு, பரங்கியர்களுக்குப் பிறகு பெரியவர் பக்தவச்சலம் ஆண்டு முடித்த 1967ஆம் ஆண்டு வரையில், 20 ஆண்டுக் காலத்தில் மேலும் 8 இலட்சம் ஏக்கராக்கள் பாசன வசதி பெற்றன. 44-ம், 8-ம் ஆக 52 இலட்சம் ஏக்கராக்கள். பக்தவத்சலம் காலத்திற்குப் பிறகு இந்த எட்டாண்டுக்கால ‘பாவிகள்' ஆட்சியில் மேலும் 15 இலட்சம் ஏக்கராக்கள் பாசன வசதி பெற்றிருக்கின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அதுமட்டுமல்ல, 1967ஆம் ஆண்டுக்குப் பின்பாகப் புதிய நீர்ப்பாசன திட்டங்களுக்குச் செலவிடப்பட்ட தொகை 148 கோடி ரூபாய். இந்த அரசின் சார்பில் செயல் வடிவம் பெற்று வருகின்ற திட்டங்களின் மதிப்பு 49 கோடி ரூபாய். இன்னும் மத்திய அரசினுடைய ஒப்புதலுக்காகத் தவம் கிடக்கும் திட்டங்களின் மதிப்பு 62.5 கோடி ரூபாய். ஆகவே, 1967-க்குப் பிறகு நம்முடைய உணவு உற்பத்தியின் இலக்கைக் கணக்கிட்டால், இந்தப் பாசன வசதியை எந்த அளவிற்குப் பெருக்கியிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆகவே, 6ஆவது அம்சம் ஏற்கெனவே எடுத்து நிறை வேற்றப்பட்டிருக்கிறது. (குறுக்கீடு) இது 6ஆவது அம்சம், 7ஆவது காண்டம் பிறகு.
அடுத்து 7ஆவது அம்சம், “நிலநீர்- பாசன வசதியைப் பெருக்குதல்; வறட்சியால் தாக்குண்ட பகுதிகளுக்குக் குடிநீர் வழங்குதல்; நிலநீர் பற்றி மேற்கொண்டு ஆய்வு செய்தல்” ஆகிய இந்த மூன்று. இதுவும் மிகவும் முக்கியமான திட்டங்கள்தான். இதை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற் கிறோம். இந்தியா முழுதும் எடுத்திருக்கின்ற கணக்கின்படி, மாண்புமிகு உறுப்பினர்கள் தெரிந்து உறுப்பினர்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய கணக்கு இது. இந்தியா முழுவதும் நிலநீர் வளம் உள்ள பரப்பு 21.36 கோடி ஏக்கர். இந்தியா முழுவதும் நிலநீர் அதாவது அடி நீர், கிரவுண்ட் வாட்டர் உள்ள நிலத்தின் பரப்பு