உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

321

துயர் தணிப்புப் பணிகளுக்கு மட்டும், குடிநீர் வழங்கு வசதிக்காகத் திட்டத்தின் கீழ் வராமல் தனிப்பட்ட முறையில் செலவழிக்கப்பட்ட தொகை 3 கோடியே 52 இலட்சம் ரூபாய். திட்டத்தின் வாயிலாக 1975-76இல் ஒதுக்கப்பட்ட தொகை 7 கோடியே 10 இலட்சம் ரூபாய். ஆக, இப்படிப்பட்ட பணிகளும் இருபது அம்சத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே தொடர்ந்து நம்முடைய தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிற திட்டங்களாகும்.

அடுத்து, 8ஆவது அம்சம், பிரதமர் வானொலியில் அறிவித்த அம்சம், “2,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு மின் உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்தப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.' கோடிட்டுக் கொள்ள வேண்டும். போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நீண்ட கால தேவைகளை நிறைவு செய்ய மத்திய அரசுத் துறையில் உரிய அளவில் அனல் மின் நிலையங்கள் நிறுவ திட்டமிடப்படும். மாநில மின்சார வாரியம் சீரமைக்கப்படும்." இது பிரதமருடைய இருபது அம்சத் திட்ட அறிவிப்பில் மிக முக்கியமான அம்சமாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மிகப் பெரும் பிரச்சினையுள்ள ஒரு அம்சம். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த நிதி யாண்டில், அதாவது 1975-76இல் இந்தியா முழுவதும் மின் உற்பத்திக்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கிற தொகை 250 கோடி ரூபாய். இந்தியா முழுமைக்கும் மத்திய அரசு மின் உற்பத்திக்காக ஒதுக்கியிருக்கிற தொகை 10 கோடி ரூபாய்.

5

தூத்துக்குடியில் இருக்கும் நம்முடைய மின் நிலையம் இருக்கிறதே அதற்கு மொத்த மதிப்பீடு 129 கோடி ரூபாய் 1974-75இல் 5 கோடி ரூபாய் அளவுக்குச் செலவிட்டிருக் கிறோம். 1975-76இல் 18 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்திருக்கிறோம், செலவாகுமென்று, மாநில நிதியி லிருந்து அதற்கு 10 கோடி ரூபாய் போட்டு விட்டோம். மீதி 8 கோடியே 7 லட்சம் கேட்டிருக்கிறோம் மத்திய அரசிடம். இந்தத் திட்டம் முழுமையாக ஆக வேண்டுமென்றால் ரூ. 129 கோடி தேவை. ஒவ்வொரு ஆண்டும் நமக்குத் தேவையான நிதி 1975-76இல் ரூ. 13.67 கோடி; 1976-77இல் ரூ. 53.23 கோடி: