உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

1977-78இல் ரூ. 30.37 கோடி. 1978-1979இல் ரூ. 5. 17.62 கோடி; 1979-80இல் ரூ.4.26 கோடி செலவழித்தால்தான் இந்தத் திட்டம் 1979-80இல் முடிவடையும்.

மின் உற்பத்தித் திட்டங்களுக்காக இந்தியா முழுமைக்கும் 250 கோடி ரூபாய் என்று ஒதுக்கியிருக்கிறார்களே இந்தியாவின் தலைமையமைச்சர், இந்திராகாந்தி அவர்கள் அறிவித்திருக் கிறார்களே, பெரு நிதி ஒதுக்கப்படும் என்று. நம்முடைய தமிழ் நாட்டுக்கு எவ்வளவு ஒதுக்கியிருக்கிறார்கள் தெரியுமா? இந்த 250 கோடி ரூபாயில். பல முறை கேட்ட பிறகு ஒரு கோடி ரூபாய்தான் 20 அம்சத் திட்ட அறிவிப்புக்குப் பிறகு தந்தது. ஒரு கோடி ரூபாய் இந்த 250 கோடி ரூபாயில் நமக்கு ஒதுக் கினார்கள். இதைத்தான் நம்முடைய நண்பர் சுப்பு அவர்களும் மற்றவர்களும் பேசும்போது ஏட்டளவில் வெகு அழகாக எழுதிக்காட்டி விடுகிறீர்கள்; இவற்றை நிறைவேற்றப் பணம் எங்கே கேட்டார்கள். அதற்கு 21ஆவது அம்சத் திட்டம் வேண்டாமா? 20 அம்சத் திட்டத்தைச் சொல்லிவிட்டு 21ஆவது அம்சமாக இவ்வளவு கோடி ரூபாய் இதையெல்லாம் செல வழிக்கப் பணம் ஒதுக்கியிருக்கிறோம் என்று சொல்லியிருக்க வேண்டாமா? அப்படிச் சொல்லவில்லை.

250 கோடி ரூபாய் இந்தியா முழுமைக்கும். அதிலே தமிழ்நாட்டுக்கு மின் உற்பத்தியைப் பெருக்க ஒரே ஒரு கோடி ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறார்கள்.

நெய்வேலி, எவ்வளவு ஆண்டுக் காலமாகத் தவம் கிடக்கின்றது? பெரியவர் பெரியவர் பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்தகாலத்தில், அதற்கு முன்பு பெரியவர் காமராஜர் முத லமைச்சராக இருந்த காலத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது. அப்போதே இரண்டாவது சுரங்கம் தொடங்கப்பெற்றிருந்தால், இரண்டாவது சுரங்கம் வெட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது 1964லோ, 1965லோ. இப்போது முடிவடைந் திருக்கும். கிட்டத்தட்ட ஏழு, எட்டு ஆண்டுக் காலம் அதற்கு ஆகும். ஆனால் இன்னும் தொடங்கவே இல்லை. நாளைக்குத் தொடங்கினால் கூட இன்னும் 7, 8 ஆண்டுக்காலம் ஆகும் நெய்வேலி இரண்டாவது சுரங்கத்தை முடிக்க.