324
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
அவர்களுடைய அறிவிப்பிலேயே பிரதமர் அவர்கள் மிகப் பெருந்தன்மையோடு இதைச் சொல்லியிருக்கிறார்கள்.
'Some of them are new. Others were set forth earlier but require to be pursued with greater vigour and determination.' என்று பிரதமர் சொல்லியிருக்கிறார்கள்.
இது முனைப்பாக நடைபெற வேண்டுமென்பதற்காகத் தான் இதை அறிவித்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, அதிலே எந்தவிதமான மாறுபாடோ, வேறுபாடோ
எனக்கில்லை.
ஆனால் ராஜாஜி அவர்கள், இந்த மாமன்றத்தில் பொறுப் பேற்றிருந்த அந்தக் காலத்திலேயே, கைத்தறிக்கு என்று சில ரகங்களை ஒதுக்க வேண்டும்; கரை போட்ட வேட்டிகள் சேலைகள் இவைகள் எல்லாம் ஒதுக்கப்பட வேண்டுமென்று ராஜாஜி அவர்கள் காலத்திலேயே தீர்மானமெல்லாம் போட வற்புறுத்தப்பட்டது.
இன்று ராஜாஜி அவர்களுக்கு நினைவாலயம் எல்லாம் எழுப்பி, அவருடைய மறைவுக்குப் பின்னால் இரண்டு நினைவு நாட்கள் கூட கொண்டாடி முடிந்த பிறகு, இப்போது ‘கைத்தறி ரிசர்வேஷன் வேண்டும்; அதற்கென்று சில ரகங் களை ஒதுக்க வேண்டும்’ என்று நம்முடைய பிரதமர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்
இதே சட்டமன்றத்திலேயே 1974இல் ஏகமனதாக கைத்தறிக்குச் சில ரகங்களை ஒதுக்க வேண்டுமென்ற தீர்மானம் நம் அனைவராலும் சேர்ந்து நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்போதுதான் அவர்கள் செய்ய முன்வந்திருக்கிறார்கள்.
அதிலே ஸ்டாண்டர்டு கிளாத்-மலிவுத் துணியைப் பற்றிக் கூட திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஹக்சர் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அதைப்போலவே அந்தத் துறையில் அமைச்சர் திரு. சட்டோபாத்தியாயா அவர்களும் என்னிடம் பேசும்போது இதைப்பற்றிக் கேட்டார்கள். ஸ்டாண்டர்டு கிளாத்தை மில்லுக்கு ஒதுக்குவது பற்றி நீங்கள் என்ன நினைக் கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் திட்டவட்டமாக அவ்வாறு