உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

325

ஒதுக்கினால் ‘கைத்தறி, கார் இரண்டும் அழிந்துவிடும்' என்று சொன்னேன். ஸ்டாண்டர்டு கிளாத்தை மில்லும் ஒதுக்கி விட்டால் இந்த இரண்டு தொழிலும் அழிந்து விடும் என்ற அச்சத்தை எல்லாம் தெரிவித்தது, இந்த அறிவிப்பெல்லாம் வருவதற்கு முன்பு, அவசர நிலைப் பிரகடனத்திற்கு முன்பு அவர்களிடம் விவாதிக்கும்போது, திட்டவட்டமாக நம்முடைய அரசின் சார்பில் இதெல்லாம் அவர்களுக்கு எடுத்துச் சொல்லப் பட்டிருக்கிறது. ஆகவே, அதைச் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் இருக்கிறதே தவிர, மாநில அரசுக்கு எதுவும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்தாவது அம்சம், 'நகர்ப்புற உச்ச வரம்பு, நகர்ப்புறங் களில் அமைந்துள்ள நிலத்தைச் சமூக உடைமையாக்கவும், நகர்ப்புற அனுபோக உரிமைக்கு உச்ச வரம்பு விதிக்கவும் சட்டம் கொண்டு வரப்படும்.'

இது பிரதமருடைய பத்தாவது அறிவிப்பாகும்.

நகர்ப்புறச் சொத்து உச்ச வரம்புக் கொள்கையை வெளி யிட்ட அந்தக் காலத்திலேயே நாம் அதை வரவேற்றிருக் கிறோம். எனக்கு நினைவு, மத்திய பிரதேச முதலமைச்சர் திரு. சேத்தி அவர்கள் என்று கருதுகிறேன், இதை அறிவித்தார்கள். அவர் 'என்னுடைய மாநிலத்தில் நான் நகர்ப்புற உச்ச வரம்பைக் கொண்டுவரப் போகிறேன். போகிறேன். கொண்டு கொண்டு வந்து விட்டேன்' என்றெல்லாம் அறிவித்தார். என்னை அதைப் பற்றி டெல்லியிலும் சென்னையிலும் நிருபர்கள் கேட்டபொழுது, இது ஒரு கவர்ச்சிகரமான கோஷம், நடைமுறைக்கு எப்படி வரும் என்று தெரியாது என்று சொன்னேன். இந்த உச்ச வரம்பில் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்றால் நகரில் உள்ள காலி மனைகளின் கையிருப்பைக் கட்டுப்படுத்தி வைப்பதா? இந்தக் கேள்விக்கு நாம் பதில் காணவேண்டும்.

கட்டப்பட்டுள்ள வீடுகளின் அளவின் எண்ணிக்கையைப் பொறுத்து உச்ச வரம்பு விதிப்பதா? அல்லது வீடுகளோ, அத்தகைய காலி மனைகளோ இருக்கக்கூடிய இடத்தின் சொத்து மதிப்பை வைத்து அதன் அளவைக் கட்டுப்படுத்துவதா? என்ற இந்தப் பிரச்சினையைக் குறித்து நாம் மத்திய நாம் மத்திய அரசுடன்