326
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
நீண்டகாலமாகக் கடிதப் போக்குவரத்து நடத்தி வருகிறோம். இந்தப் பிரச்சினைகள் எழுகின்ற நேரத்தில் இந்த உச்ச வரம்புச் சட்டத்தை எப்படி அமல்படுத்துவது என்பதில் குழப்பம் ஏற்படும். அப்படிக் குழப்பம் ஏற்படுகிற காரணத்தால்தான் மத்திய அரசு சார்பிலும் இதுவரை எந்த முடிவையும் அவர்கள் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்
ஆனால், அப்படி ஒரு முடிவை எடுக்கிற நேரத்தில் அரசு களுக்கு அனுசரணையாக இருக்க வேண்டும் என்றுதான் இந்த அரசின் சார்பில் நாம் நகர்ப்புறச் சொத்து வரியை அதிகரித்து. ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். அது மசோதாவாக வந்து, அதிலே சில திருத்தங்களோடு இந்தச் சட்டமன்றத்திலே மாண்புமிகு உறுப்பினர்கள் கூறுகிற கருத்துக் களை எல்லாம் அறிந்து, கலந்து பேசி அதை உருவாக்க இருக் கிறோம். அதன்படி யார் யாருக்கு எவ்வளவு சொத்து என்ற அந்த அளவெல்லாம் தெரிந்துவிடுமானால், பிறகு மத்திய சர்க்கார் அந்த உச்ச வரம்பு கொண்டு வரும்போது அல்லது சட்டத்தை எப்படிக் கொண்டு வருகிறார்களோ அதற்கேற்றபடி, நாம் இப்போதே அவர்களுக்கு வழிமுறைகளைத் தேடித் தருகிறோம். இதை எந்த மாநிலமும் செய்யவில்லை. ஆகவே, இந்த அம்சத்தைப் பொறுத்தவரையிலும், 10-வது அம்சத்தைப் பொறுத்தவரையிலும் கூட நம்முடைய மாநிலத்திலே அதை நிறைவேற்றுவதற்கேற்ப அடிப்படையை அமைத்துக் கொடுக் கிறோம். அது விரைவில் சட்டமன்றத்தில் வர இருக்கிறது.
திருமதி த.ந. அனந்தநாயகி: மத்திய அரசு நகர்ப்புற சொத்துக்களுக்கு உச்ச வரம்பு விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வரும் வரையில் காத்திருக்காமல் சில மாநிலங்கள் ஏற்கெனவே செய்தது போல் நீங்களும் சட்டத்தைக் கொண்டு வரக்கூடாதா?
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: 'எந்தெந்த மாநிலத்தில் செய்திருக்கிறார்கள்? எப்படி எப்படிச் செய்திருக் கிறார்கள் என்று சொன்னால் புரிந்து கொள்ளலாம். எழுதிக் கொடுங்கள் ஒன்றும் சொல்லாமல் எதையாவது சொல்லிவிட்டு ஆடிக் கொண்டே இருந்தால் எப்படி?