உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

327

திருமதி த.ந. அனந்தநாயகி: மத்தியப் பிரதேச முத லமைச்சர் சேத்தி கொண்டு வந்ததாக நீங்களே சொன்னீர்களே.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: சொன்னார் அவர். சொன்னாரேயொழிய செய்தாரா என்று தெரியவில்லையே. சொல்லுகிறார்கள். செய்வதில்லையே. (டாக்டர் ஹாண்டே குறுக்கீடு) ஹாண்டே அவர்கள் சொல்லுகிறார்கள், 'அங்கு நகரமே இல்லை, நாகப்பூர் மட்டும்தான் இருப்பதாக'. நகரமே இல்லாததால் சுலபமாகச் சொல்லலாம்.

11 ஆவது அம்சம்- “நகரச் சொத்தைக் குறைத்து மதிப்பீடு செய்தலைத் தடுக்க சொத்துக் கணக்குகளை மதிப்பீடு செய்ய ஸ்பெஷல் ஸ்குவாட் வருமானவரிஏய்ப்போர் மீது கடும் தண்டனை.’

து கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக அம்மை யார் அவர்கள் பிரகடனப்படுத்திய ஓர் அம்சம்.

நம்முடைய சட்டமன்றத்தில் 1973ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருக் கிறோம். கே.டி.கே. அவர்கள்தான் அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவீர்களா என்று கேட்டார்கள். நிறைவேற்ற முன் வந்தால் நீங்கள் ஆதரிப்பீர்களா என்று கேட்டேன். மார் தட்டி நிச்சயமாக ஆதரிப்பேன் என்று சொன்னார். நாங்களெல்லாம் கே.டி.கே. அவர்கள் ஆதரித்தால் மத்திய அரசு நிச்சயமாக அதனை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் தீர்மானத்தைக் கொண்டு வந்து இங்கே நிறைவேற்றினோம்

ஒரு

“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார முறைகேடுகள், விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகிய வற்றுக்குக் கறுப்புப் பணத்தின் புழக்கமே முக்கிய காரணம் என்பதை இந்தச் சட்டப் பேரவை எடுத்துக் காட்டியுள்ளது.

கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்து வெளிக்கொணர வாஞ்சுக் குழு தெரிவித்த பரிந்துரைகளில் கண்டுள்ளபடி மத்திய அரசுக்குள்ள அதிகாரங்கள் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கு மட்டும் அல்ல; மாநில அரசுக்கும் என்று இரண்டு அரசுக்கும் இருக்கட்டும் என்று, மாநில அரசுக்கும் வழங்கப்பட