உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

வேண்டுமென்று, இந்த மன்றம் வலியுறுத்தியுள்ளது" என்ற தீர்மானத்தை, 1973ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றி, இந்த 11ஆவது அம்சத்திற்கும் அப்போதே அச்சாரமாக நம்முடைய ஒப்புதலை அளித்திருக்கிறோம். ஆகவே, இதிலும் பிரச்சினை இல்லை.

12ஆவது அம்சம்- "தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தில் பங்கும் மூலதனமும் ஆதாயமும் வழங்கும் திட்டம்” இது பிரதமர் அறிவித்த மற்றொரு திட்டம்.

இந்தத் திட்டத்தை 1973ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே நாம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வந்திருக் கிறோம். இதற்கான ஒப்புதல் 1973ஆம் ஆண்டில் இருந்து மத்திய சர்க்காரிடம் இருந்து நமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததெல்லாம், இது பாராட்டப்பட வேண்டிய ஒரு நட வடிக்கை என்ற ஒரு கடிதந்தான் கிடைத்தது. ஆனால், 1973ல் இருந்து 1975 வரை எந்தவிதமான ஒப்புதலும் கிடைக்காமல் இன்றைக்குப் பிரதமர் அவர்களிடத்தில் இருந்து அறிவிப்பு வருகிறது.

கதாசிரியராக இருந்த அனுபவத்தில் ஒன்று சொல்கிறேன். கதாசிரியர் கதைகளை எழுதி யாரிடத்திலாவது கொடுத்தால், அதை யார் கொடுத்தார்கள் என்பதை வெளியில் சொல்லாமல் தங்கள் பெயரில் வெளியிட்டு விடுவது. அது போல், இந்தத் தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தில் பொறுப்பும் லாபத்தில் பங்கும் வழங்குகின்ற இந்தத் திட்டத்தை நாம் 1973ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே அறிவித்து, மத்திய அரசிடம் இதற்கான ஒப்புதலைக் கேட்டோம். ஒப்புதல் கிடைப்பதில் என்ன சிக்கல் என்றால், இதற்கு திரு. கே.டி.கே. தங்கமணி அவர்கள் கூடச் சொன்னார்கள் முதலீடு செய்வது கூடாது என்று. முதலீடு செய்தால் தொழிலாளர்களுக்கு நஷ்டத்தில் பொறுப்பு ஏற்க வேண்டிய அவசியமில்லை. லாபத்தில் அவர்களுக்குப் பங்கு, ஆகவே முதலீடு செய்ய வேண்டிய தேவை இல்லை. இதிலே ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால் வருமான வரி கொடுத்த பிறகு டிவிடென்ட் பிரிக்கக்கூடாது. டிவிடென்ட் பிரித்த பிறகு வருமான வரி கொடுக்க வேண்டும்.