உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

329

இவ்வளவுதான்

சொன்னோம்.

அப்போதுதான் தொழிலாளர்களுக்குத் தொகை அதிகமாகக் கிடைக்கும். இதற்கு ஏற்ற வகையில் கம்பெனி சட்டத்தைத் திருத்திக் கொடுங்கள் என்று மத்திய அரசைக் கேட்டோம்.

திரு. கே.டி.கே. தங்கமணி: நான் புரிந்து கொண்டதைச் சொல்கிறேன். 'வொர்க்கர்ஸ் பார்டிஸிபேஷன் இன் இன்டஸ்ட் ரீஸ்' என்று சொன்னால் ஏற்கெனவே இருக்கக்கூடிய தொழிலில், அது தனியார் தொழிலாகவும் இருக்கலாம் அல்லது பொதுத் துறையாகவும் இருக்கலாம். தனியார் துறையாக இருந்தாலும் சரி அல்லது பொதுத்துறையாக இருந்தாலும் சரி, தொழிலாளர் களுக்கு நிர்வாகத்தில் பங்கு இருக்க வேண்டும். உற்பத்தியில் பங்கு இருக்க வேண்டும். விநியோகத்தில் பங்கு இருக்க வேண்டும். இது என் கருத்து என்றுதான் சொன்னேன். அந்த மாதிரியாக இன்று பாங்குகளில் அந்தத் தொழிலாளர்களுக்குக் கொஞ்சம் பங்கு கொடுத்திருக்கிறார்கள். அதேமாதிரி நமது அரசாங்கம் நடத்தக்கூடிய போக்குவரத்து இலாக்காவிலே அல்லது மின்சார இலாக்காவிலே அம்மாதிரியான, ஒரு நிலையை எடுப்பதற்கு இந்த அரசாங்கம் தயாராயிருக்கிறதா? அதற்கு எந்தவிதமான பணமும் தேவை இல்லை. தமிழ்நாடு அரசாங்கம் அல்லது எந்த மாநில அரசாங்கமானாலும் தங்களிடமுள்ள அதிகாரங்களை வைத்து அதைச் செய்யலாம்.

டு

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: நிர்வாகத்தில் அவர்களுக்கும் பொறுப்பு உண்டு என்று எடுத்துச் சொல்லியிருக் கிறோம். நிர்வாகத்தில் பொறுப்பு இல்லாமல் முதலீட்டில் மட்டும்தான் என்று அரசு சொல்லவில்லை. நிர்வாகத்திலும் பொறுப்பு, முதலீட்டிலும் பங்கு என்று சொல்லியிருக்கிறோம். நஷ்டம் வந்தால் எந்தத் தொழிலாளரும் பாதிக்கப்படக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறோம். ஆகவே இதில் எந்தவிதமான சிக்கலும் இல்லையென்று தெரிவித்துக்கொள் கிறேன். 1973-ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே நாம் இதை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறோம். ஆகவே, நாம் நிறை வேற்றத் தொடங்கிவிட்டோம் என்பது ஒரு குற்றமாகாது.

அடுத்து, 13-வது அம்சம். “ஏழை மாணவர்கள் படிக்கும் மாணவர் இல்லங்கள், அவர்கள் தங்கும் விடுதிகள் ஆகிய