உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

331

இல்லையா எனத் தயவு செய்து மாற்றுக் கட்சியில் உள்ளவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அது ஏற்கனவே அமைக்கப்பட்ட ஒன்று. ஆகவேதான் அதை நாம் நிறைவேற்றி முடித்துவிட்டோம் என்றுகூட தைரியமாகச் சொன்னோம்.

விலை குறைக்கப்பட வேண்டாமா என்று திரு. கே.டி.கே. அவர்கள் கேட்டார்கள். நமது கல்வி அமைச்சர் நாவலர் அவர்கள் கல்வி மானியத்தின் மீது பேசும்போது அதுபற்றி நினைவகங்கள் எல்லாம் தந்திருக்கிறார்கள். மத்திய ய அரசாங்கத்தின் விலைக்கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் நடைபெற்றிருக்கின்ற குறைபாட்டை இந்த இருபது அம்சத் திட்டத்தை அறிவித்த பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

மலிவு விலையில் அச்சுத்தாள்களைப் பெற்றுப் பாட நூல் களை வெளியிட தனியார் நிறுவனங்கள் அடக்க விலையைப் போன்று மூன்று மடங்கு அதிகமான விலைக்கு விற்பதற்கு அனுமதி கோரி, அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக் கிறது. அடக்க விலைக்கு சமமான விலையில், மூன்று மடங்கு அதிகமான விலையில் தனியார் நிறுவனங்கள் தங்கள் பாட நூல்களை விற்க மத்திய அரசிடம் அனுமதியைப் பெற்றிருக் கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு, இந்தப் பிரச்சினை யில் நாம் நம்முடைய கவனத்தைச் செலுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆண்டுதோறும் 18 லட்சம் மாணவர்களுக்கு, மூன்றாம் வகுப்பு வரையில் பயிலும் ஏழை மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களை இலவசமாக வழங்குகிறோம். இதற்காக இதுவரை ஆகியுள்ள ஆயத்தச் செலவு ஏறத்தாழ 86 லட்சம் ரூபாய்; இதுவரையில் அதற்குச் செலவாகி இருக்கிறது.

விலை அதிகம் என்று சொன்னார்கள். இப்போது என்னு டைய கையில் இருக்கிற இந்தப் புத்தகத்திற்கு. 'ரிசார்ட்ஸன் லிவிங்க்ஸ் டாஸ்க் ஃபார் எஜுகேஷன்' என்ற இந்தப் புத்தகத் தினுடைய பக்கங்கள் 88. இதனுடைய விலை ரூ. 5. இது தனியார் வெளியிட்டிருக்கிற புத்தகம். 88 பக்கங்களுக்கு விலை ரூ. 5.